ஒரு ரஜினி படம் தோற்றால் அடுத்த படம் ஓடலையா.. அதுபோல பாஜக மீண்டு வரும்.. தமிழிசை வாவ்!
ரஜினி படங்களுடன் ஒப்பிட்டு தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த தேர்தலில் மீண்டு வரும்" என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது. அதிலும் பாஜக கோட்டை என கூறப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறி கொடுத்து விட்டு கடுமையான அதிருப்தியில உள்ளது.
தேர்தலில் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும், இனி பாஜக தன் குறைகளை களைந்து மேலே வரும் என்றும் அக்கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இன்னொரு பக்கம் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்று ட்வீட்களை போட்டு அவர்களை சமாதானப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.

வெற்றிகரமான தோல்வி
பாஜக தலைவர்கள் இவ்வாறு செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இது "ஒரு வெற்றிகரமான தோல்வி" என்று புது விளக்கத்தை அளித்தார். அத்துடன் மோடி அலை ஓயவே இல்லை என்றும் உறுதிப்பிடிப்புடன் சொல்லி வருகிறார்.

இன்னொரு படம் ஓடுகிறது
இந்த 5 மாநில தேர்தல் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் பேசியபோது, திடீரென ரஜினியை ஒப்பிட்டு பேசினார். தமிழிசை சொன்னதாவது: "ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படம் ஓடவில்லை என்றால் அவரது செல்வாக்கு சரிந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அவரது இன்னொரு படம் வெற்றி பெறுகிறது.

மீண்டு வரும்
அதிலிருந்து ரஜினி மறுபடியும் மீண்டு வரவில்லையா? அதுபோலதான் அரசியலும். அதுபோலதான் பாஜகவின் சறுக்கலும். இது ஒரு சின்ன சறுக்கல். அவ்வளவுதான். ஆனால பாஜக மீண்டு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினிக்கு பதிலடியா?
2 தினங்களுக்கு முன்பு 5 மாநில தேர்தல் குறித்து ரஜினி கருத்து சொன்னபோது, பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டதாகவும், இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவு என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசை சவுந்தராஜன் அளித்துள்ள உதாரணம் ரஜினிக்கான பதிலா? அல்லது தன்னம்பிக்கைக்கான விளக்கமா? என தெரியவில்லை.
-
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
உடல்நிலை சரியில்லை என்று அரசியலுக்கு வராமல் தப்பினார்! ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிலடி! அடுத்த பஞ்சாயத்து -
செத்துவிழும் மீனெல்லாம் ஆற்றோடு போகும் .. ரஜினிக்காக வைரமுத்து எழுதிய பொக்கிஷம்! வெளிவந்த ரகசியம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications