“200 தொகுதிகளில் வெற்றி” - செங்கோட்டையன்! வாய்ப்பில்லை ராஜா.. தமிழிசை சௌந்தரராஜனின் பதிலை பாருங்க!
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் ரிசல்ட்டுக்காக அரசியல் கட்சிகள் காத்துக்கிடக்கின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அசால்ட்டாக 200 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவருக்கு பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கொடுத்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

சமீபத்தில் இது குறித்து பேசியிருந்த செங்கோட்டையன், "எங்கள் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இது குறித்து, பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர்,
"தவெக 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்று செங்கோட்டையன் கனவு காண்கிறார். தவெகவினர் மே.4 வரை கனவு காணட்டும். ஓட்டை பிரிப்பார், ஸ்பாய்லராக இருப்பார் என்று சொன்னால், அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னாலும் கூட ஓகேதான்.
ஆனால், 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். இது சாதாரண சத்தம் இல்லை. வெடிகுண்டு சத்தம் போன்றது. விசில் சத்தம் அந்த அளவுக்கு இருக்காது. கனவு காண்பதற்கு எல்லோருக்கும் தகுதி இருக்கிறது. எனவே மே.4ம் தேதி வரை அவர்கள் கனவு காணட்டும்.
200க்கும் அதிகமான தொகுதிகளை ஜெயிப்பார் என்று சொல்வதெல்லாம் யதார்த்தம் இல்லாதது. தற்போது ஆன்மீகத்தை தேடி செல்லும் விஜய், அதன் பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேடி போவாரோ என்று சந்தேகமாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் களமிறங்கியிருந்தார். பாஜக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 233 தொகுதிகளில் தவெக களம் கண்டிருக்கிறது. தேர்தல் முடிந்த நிலையில், விஜய் கோயில் கோயிலாக ரவுண்டடித்து வருகிறார். நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற அவர், இன்று ஸ்ரீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றிருக்கிறார். மறுபுறம் தவெக நிர்வாகிகள், வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications