10 ஆண்டுகளாக ஓடாத படமெடுத்த திமுக- காங்கிரஸ் கூட்டணி.. மக்கள் அனைத்தையும் அறிவர்.. தமிழிசை
சென்னை: 10 ஆண்டுகளாக ஓடாத படமெடுத்தவர்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பதை மக்கள் அறிவர் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டை பாஜக அரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ட்ரெய்லர்
இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம், தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம்.

சினிமா
ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப் பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள். அதுபோல் சொல்கிறார் மோடி.

விமர்சனம்
எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
|
5-ஆவது பட்ஜெட்
இதற்கு தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில் #budget2019 ஒரு ட்ரெய்லர் என்கிறார் மோடி ! ட்ரெய்லர் தயாரிக்கவே 41/2ஆண்டுகளா? எனக் கேட்கும் ஸ்டாலின் அவர்களே இது 5வது (பட்ஜெட்) பட ட்ரெய்லர்!4 வெற்றிகரமான பட்ஜெட் படங்களை கொடுத்த பின்னர்..!நீங்கள் 10 ஆண்டுகள்.. ஓடாத படமெடுத்தவர்கள் என்பதை மக்கள்அறிவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications