சூரியனுக்கு குட்பை சொல்லி, விசில் அடிக்க தயாராகும் காங்கிரஸ்.... தடதடத்த தமிழிசை
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி குறித்து பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன், சாலமன் பாப்பையா பாணியில் பன்ச் அடித்து தங்கள் கூட்டணிக்கு சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம், "சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பலாம். அவ்வளவுதான் செய்ய முடியும். மக்கள் தான் ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஏதாவது செய்தால், பாருங்கள் அடக்குமுறையை ஏவுகிறார்கள் என்று எதையாவது சொல்வார்கள்.

விசில் அடிக்க தயாராகிட்டாங்க
தேர்தலுக்கு 2 மாதங்கள் தான் உள்ளன. பொது மக்கள் கையில் தான் எல்லாம் இருக்கிறது. அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகி கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிக் கூட்டணி உதிரியாகி கொண்டிருக்கிறது. திமுக மீது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கை போய்விட்டது. விசிக திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்கிறார். இதேபோல காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை போய்விட்டது.
அதனால் தான் அவர்கள் விசில் அடிப்பதற்கு தயாராகிவிட்டார்கள். சூரியனை கும்பிட்டது போதும் என்கிற முடிவுக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. யாரெல்லாம் திமுக கூட்டணி வேண்டாம் என்கிறார்களோ, அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். எங்கள் கூட்டணி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அல்லது பாஜக தேர்தல் குழுவில் உள்ள துரைசாமி அண்ணனை பார்க்கலாம். அந்த சாமியை பார்க்கலாம், இல்லை இந்த சாமியை பார்க்கலாம்.
எங்களிடம் 2 சாமி இருக்காங்க
சாமியை புறக்கணிப்பவர்கள், சாமி வேண்டாம் என்று கூறுபவர்கள் இங்கு வந்த எங்கள் சாமியை சந்தித்து கூட்டணியில் இணையலாம். எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. நாளுக்கு நாள் கூட்டணி பலமடைவதால், அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது" என்றார்.
-
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications