கரண்ட் ஸ்டேட்டஸ் என்ன என்பதை கரண்டே கூறிவிட்டது! பேசும் போதே மின் தடையால் கடுப்பான தமிழிசை!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக கவலைக்குரியதாக உள்ளது. தீபாவளி நாளில் எத்தனை கொலைகள் நடந்தன என பட்டிமன்றம் நடைபெறுகிறது. சபாநாயகர் தாக்குதல், ஆட்சியருக்கு தொல்லை உள்ளிட்டவை தான் மாற்றமா? என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை பேசும் போது மின் தடை ஏற்பட்ட நிலையி, கரண்ட் ஸ்டேட்டஸ் என்ன என்பதை கரண்டே கூறிவிட்டது என விமர்சித்தார்.
சென்னை செங்குன்றம் அடுத்த நல்லூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வெண்அங்கி அணியும் விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்," பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 384இல் இருந்து, 844ஆக அதிகரித்துள்ளதாகவும், எம்பிபிஎஸ் இடங்கள் 51000இல் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது அதிக வாய்ப்புகளை மாணவ மாணவிகளுக்கு கொடுக்கிறது.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் ஏறக்குறைய தனது பணிகள் முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. பயன்பாட்டிற்கு வந்த பிறகு உலக தரம் வாய்ந்த முழுமையான ஒரு மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் சேவை செய்த மருத்துவர்களுக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவியை அரசு செய்து தர வேண்டும். மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டண வசூல் குறித்த கேள்விக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடப்பார்கள்.
சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான கவலைக்குரியதாக உள்ளது. தீபாவளி நாளில் 6 கொலையா, 7 கொலையா, 11 கொலையா என்று பட்டிமன்றம் நடக்கிறது, மாற்றம் மாற்றம் என்பது, துணை சபாநாயகர் தன் வீட்டிற்கு மனு அளிக்க வந்தவரை தாக்குவதும், மாற்றி மாற்றி பேசுவது தான் மாற்றமா? எம்எல்ஏ ஒருவர் ஆட்சியருக்கு அளித்த தொல்லை தான் மாற்றமா?
பாலியல் குற்றம்
எந்த கட்சியை சார்ந்தவர்களாக, எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பாலியல் குற்றம் என்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்கள் மீது ஏவப்படுகின்ற மிக கடுமையான தாக்குதல். எந்த கட்சியாக இருந்தாலும் அதை அனுமதிக்க கூடாது. எந்த கட்சியாக இருந்தாலும் பாலியல் குற்றம் செய்துவிட்டு தப்பித்துவிட்டு மறுபடியும் அரசியலில் கோலோச்ச அனுமதிக்க கூடாது.
துணை சபாநாயகர்
துணை சபாநாயகர் விவகாரத்தில் சிசிடிவி பதிவுகள் வெளியிட்டுள்ளது. மாற்றி மாற்றி பேசுவதால் தான் மாற்றம். இந்த மாற்றம் மக்களுக்கு ஏமாற்றமாக மாறி கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயலாற்றுவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது. உடனே கூட்டணி என்றல்ல. கொள்கை வேறு ஆட்சி வேறு. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும்.
வைகோ
மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், தனது வீட்டின் அருகிலும் 2 மணி நேரம் மின்தட்டை. நிர்மல் குமார் இதை கவனிக்க வேண்டும். ஆட்சியில் தவறு நடந்தால் விமர்சனம் செய்யலாம், தேவையின்றி விமர்சனம் செய்ய கூடாது. வைகோ கூறுவதை எல்லாம் நம்ம நியாயமாக எடுத்து கொள்ள முடியாது. மாற்றி மாற்றி பேசுவதில் வைகோவும் ஒருவர். திமுக 5வருட ஆட்சி, தற்போதைய ஆறு மாத ஆட்சி, குறுகிய
கால ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த சட்டம் ஒழுங்கு சரியில்லை." என்றார்.




Click it and Unblock the Notifications
