சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெறஞ்ச மனசு கொண்ட விஜயகாந்த்.. நீண்ட ஆயுளுடன் வாழ தமிழிசை சவுந்தரராஜன், ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். . சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த இவர் அரசியலில் களமிறங்கினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் , 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பொட்டு வச்ச தங்கக் குடம்.. ஊருக்கு நீ மகுடம்..வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று! பொட்டு வச்ச தங்கக் குடம்.. ஊருக்கு நீ மகுடம்..வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று!

இதையடுத்து அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தது . 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்து வந்தார். அரசியல் வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்த விஜயகாந்த் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி அவ்வப்போது தனது தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார். தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா கூறி இருப்பது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் இன்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயகாந்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

Tamilisai soundrarajan, MK Stalin wishes to Vijayakanth on 70th birthday

Recommended Video

    Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
    வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.

    Tamilisai soundrarajan, MK Stalin wishes to Vijayakanth on 70th birthday

    முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.உடல் நலம் பெற்று - துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

    Tamilisai soundrarajan, MK Stalin wishes to Vijayakanth on 70th birthday

    சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Leaders wishes DMDK leader Vijayakanth 70th birthday: (விஜயகாந்த் 70வது பிறந்தநாள் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து) The 70th birthday of DMDK leader Vijayakanth is being celebrated today. Telangana Governor Tamilisai Soundararajan, Tamil Nadu Chief Minister M.K. Stalin and Opposition Leader Edappadi Palanichamy wished him good health and long life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X