ஊழல் களவாணிகளே! இதுதான் PMO நடைமுறை! ஆக ஆக என ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை!
Recommended Video
சென்னை : பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தை கடந்த நவம்பர் மாதம் கஜா புயல் தாக்கியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன.
கஜா புயல் தமிழகத்தை தாக்கிய போது பிரதமர் மோடி நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் இதே குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.

பிரதமர் டிவிட்
இந்நிலையில் ஃபனி புயல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசினேன். ஃபனி புயல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசிடம் இருந்து அனைத்து ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என உறுதியளித்தேன். ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த நாடும் நிற்கிறது என தெரிவித்துள்ளது.

தமிழிசை பதிலடி
பிரதமர் அலுவலகத்தின் இந்த டிவிட்டை மேற்கோள் காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து பிரதமர் மீது குற்றச்சாட்டை கூறி வரும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
|
ஆக.. ஆக..ஆக...
இதைப்போல்தான் கஜா புயல் வந்த போதும் பிரதமர் செய்தார். ஒரு டுவிட்டர் செய்திகூட அனுப்பவில்லை. என. ஸ்டாலின் பொய்பிரச்சாரம். ஏன்வரவில்லை?வரவில்லை? என்று கேட்ட வாழைப்பழக்கதை போல் கேட்ட. ஊழல் களவாணிகளே! இதுதான் PMO நடைமுறை! ஆக! புரிந்ததா? ஆக!ஆகா?ஆக! என பதிவிட்டுள்ளார்.

தமிழிசை கிண்டல்
தமிழிசை தனது டிவிட்டில் நான்கு முறை ஆக ஆக என குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் பேசும் போது ஆக என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திவருகிறார்.

சீமான் சவால்
ஸ்டாலினின் ஆக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். மீம்ஸ் கிரியேட்டர்களும் இதனை கிண்டலடித்துள்ளனர். அதுமட்டுமா நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ஆக என்று கூறாமல் ஸ்டாலினால் பேசமுடியுமா என சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications