+1 பொதுத்தேர்வு முடிவுகள்! கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 100க்கு 100 அதிகம்.. தமிழில் எத்தனை பேர்?
சென்னை: இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பாடம் வாரியாக எத்தனை பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய +1 பொதுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7,534 பள்ளிகளில் இருந்து மொத்தம் 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் சரியாகத் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. இதற்கிடையே இன்று +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
+1 பொதுத்தேர்வு: அதில் தமிழ்நாட்டில் இந்தாண்டு மொத்தம் 8.25 லட்சம் பேர் +1 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் தேர்ச்சி விகிதம் 91.17%ஆக உள்ளது. பாடம் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாகக் கணினி அறிவியல் பாடத்தில் 99.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில் இயற்பியல் பாடத்தில் 97.23% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வேதியியல் பாடத்தில் 96.20% பேரும், உயிரியில் பாடத்தில் 98.25% பேரும், கணிதத்தில் 97.21% பேரும், தாவரவியல் பாடத்தில் 91.88% பேரும், விலங்கியல் பாடத்தில் 96.40% பேரும், வணிகவியல் பாடத்தில் 92.45% பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 95.22% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100க்கு 100: பாடம் வாரியாக எத்தனை பேர் எந்தெந்த பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 8 பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 696 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
பிராந்தியம் வாரியாக: வேதியியல் பாடத்தில் 493 பேரும், உயிரியல் பாடத்தில் 171 பேரும், கணிதத்தில் 7799 பேரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், விலங்கியல் பாடத்தில் 29 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 34332 பேரும், வணிகவியல் பாடத்தில் 620 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 415 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 100க்கு 100 பெற்றுள்ளனர். அதேபோல பொருளியல் பாடத்தில் 741 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 288 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் 293 பேரும் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் 8418 மாணவர்கள் எதாவது ஒரு பாடத்தில் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications