கண்ணிலிருந்து தப்ப முடியாது.. முதல்வர் கொண்டு வந்த "360 டாஷ்போர்ட்".. என்ன சிறப்பு தெரியுமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒருங்கிணைத்த தளம்தான் "தமிழ்நாடு 360" என்ற தளம். முதல்வருக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் 360 டிகிரி டாஷ்போர்ட் ஆகும் இது. முதல்வர் ஸ்டாலின் மூலம் அதிகாரபூர்வமாக இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தலைமை செயலக அதிகாரிகள் டாஷ் போர்ட் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த டாஷ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்கள், விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. இன்னும் பல வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
திமுகவின் வாக்குறுதிகள், தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். இதற்காக ஒருங்கிணைத்த டிஜிட்டல் தளம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே துறை ரீதியான கூட்டம் ஒன்றில் பேசி இருந்தார்.

திட்டங்கள்
அதாவது அரசின் அனைத்து திட்ட விவரங்களும், அது தொடர்பான அறிவிப்புகளும் ஒரே இடத்தில் இடம்பெறும் வகையில் இந்த தளம் செயல்பட வேண்டும் என்று என்று முதல்வர் ஸ்டாலின் அப்போதே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது "தமிழ்நாடு 360" என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். பெரிய ஆராய்ச்சிக்கு பின் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்
முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த தளம் செயல்பட உள்ளது. அதன்படி முதல்வர் தனது அறையில் இருந்து கொண்டே, எந்த துறையில் இன்று என்ன அறிவிப்பு வெளியானது. அதன் நிலைமை எப்படி இருக்கிறது. அந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டதா? போன மாதம் என்ன திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

தமிழ்நாடு 360
அதாவது முதல்வர் ஸ்டாலின் எளிதாக இந்த டாஷ்போர்டை திறந்து எந்த துறையில் என்ன நடக்கிறது.. இனி என்ன நடக்கும் என்பதை லேசாக மவுசை நகர்த்திய கண்டுபிடித்துவிட முடியும். அனைத்து தகவல்களும் இதில் நொடிக்கு நொடி அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கப்படும். அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையிலும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வகையிலும் இந்த தளம் செயல்படும்.

ஸ்டாலின் 360
அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் இந்த பக்கத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ஒவ்வொரு துறையில் புள்ளி விவரங்களோடு என்னென்ன பணிகள் நடக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கண்காணிக்க முடியும். எங்கோ ஒரு கிராமத்தில் சுகாதாரத்துறை மூலம் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதை முதல்வர் எளிதாக இந்த தளம் மூலம் கண்காணிக்க முடியும். திட்டம் கிடப்பில் இருந்தால் உடனே உத்தரவு போட முடியும்.

360 டாஷ் போர்ட்
அதாவது அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், திட்டங்களை முதல்வர் ஒரே இடத்தில் பார்க்கும் 360 தளம்தான் இந்த தமிழ்நாடு 360 டேஷ் போர்ட் என்று தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் முதல்வரின் பார்வையில் இருந்து எதுவும் மிஸ் ஆகாது. அவர் அனைத்தையும் எளிதாக கண்காணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Recommended Video

தொடக்கம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மூலம் அதிகாரபூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தலைமை செயலக அதிகாரிகள் டாஷ் போர்ட் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளித்தனர். நீர் நிலைகளின் அளவு குறித்து டேஷ் போர்ட் மூலமாக விளக்கி முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications