தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்யக் கூடும்.

நாளை இலங்கையை ஒட்டியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தமிழகம் மற்றும் புதுவையில் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையின் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்யும்.
அடுத்த இரு தினங்களுக்கு குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என புவியரசன் தெரிவித்தார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications