சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டதொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதையடுத்து இன்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.
Mar 24, 2022, 1:48 pm IST
JUSTIN |
காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்!
Mar 24, 2022, 12:42 pm IST
இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம்- முதல்வர் உறுதி.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள்- முதல்வர்.
ஈழத்தமிழர்கள் விவகாரத்தை மத்திய அரசுடன் மாநில அரசு ஆலோசிக்கும்- முதல்வர்
Mar 24, 2022, 12:41 pm IST
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது; தேதி குறிப்பிடாமல் அடுத்தக் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
Mar 24, 2022, 12:07 pm IST
பத்தாம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ சேரும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் ரூ. 1000 நிதி உதவி.
தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
Mar 24, 2022, 11:55 am IST
10ஆம் வகுப்பு படித்து ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000.
பத்தாம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் - நிதியமைச்சர்
Mar 24, 2022, 11:55 am IST
JUSTIN |
ரூ.1000 ஊக்கத்தொகை - அமைச்சர் அறிவிப்பு
Mar 24, 2022, 10:57 am IST
லட்சிய அரசியல் செய்பவர்கள் நாங்கள் -சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
Mar 24, 2022, 10:57 am IST
தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழை இழப்பீடு தொகையை மத்திய அரசிடம் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டு பெற்றுத்தர வேண்டும் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Mar 24, 2022, 10:57 am IST
ஜூன் மாதம் இறுதிக்குள் அவிநாசி -அத்திக்கடவு திட்டம் நிறைவடையும்; தற்போது 93% பணிகள் முடிவடைந்துள்ளது - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான தனது பதிலுரையில் தகவல்
Mar 24, 2022, 10:45 am IST
தமிழ்நாடு சொத்துரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் முத்துச்சாமி.
Mar 24, 2022, 10:44 am IST
JUSTIN |
நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் விளக்கம்!
Mar 24, 2022, 10:42 am IST
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அனுமதி கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அமளி.
அதிமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் வெளிநடப்பு
Mar 24, 2022, 10:34 am IST
வடகிழக்கு பருவமழை இழப்பீடாக மத்திய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடியே 45 லட்சம் கேட்டோம்; ஆனால் அவர்கள் கொடுத்ததோ 352 கோடியே 85 லட்சம் தான் -சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
Mar 24, 2022, 10:34 am IST
தற்காலிக நிவாரண நிதியாக ரூ.1,510 கோடி கேட்டோம்; அதையும் மத்திய அரசு கொடுக்கவில்லை -சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
Mar 24, 2022, 10:27 am IST
தொழில்துறை வளர்ச்சி அடைய வேண்டுமானால் நில வங்கியை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது -அமைச்சர் தங்கம் தென்னரசு
Mar 24, 2022, 10:27 am IST
விவசாயிகளிடம் வலுகட்டாயமாக நிலத்தை அரசு பறிக்காது; கூடுமானவரை விவசாயிகளிடம் பேசி அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கொடுக்க தொழில்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது -அமைச்சர் தங்கம் தென்னரசு
Mar 24, 2022, 10:23 am IST
தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரத்து நகை கடன்களுக்கு தள்ளுபடி ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாகவே பொதுநகை கடன் தள்ளுபடி ரசீது அனைவருக்கும் வழங்கப்படும் -அமைச்சர் ஐ.பெரியசாமி
Mar 24, 2022, 10:21 am IST
சாலை பாதுகாப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் -அமைச்சர் எ.வ.வேலு
Mar 24, 2022, 10:21 am IST
விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் 'தமிழ்நாடு மாடலை' நாங்களும் பின்பற்ற இருக்கிறோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார் - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
Mar 24, 2022, 10:18 am IST
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் 15% விபத்து குறைந்திருக்கிறது. விபத்துக்களை குறைக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே பாராட்டியுள்ளார் - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Mar 24, 2022, 10:10 am IST
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது
Mar 23, 2022, 12:26 pm IST
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
Mar 23, 2022, 12:08 pm IST
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சி காலத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகின்றன - இபிஎஸ்
Mar 23, 2022, 12:02 pm IST
திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுவது 10 மாத குழந்தையிடம் 10-ம் வகுப்பு மதிப்பெண் என்ன எனக் கேட்பது போல் உள்ளது. இந்த 10 மாத குழந்தை (திமுக ஆட்சியை சொல்கிறார்) பத்தாம் வகுப்பில் மட்டுமல்ல பட்டப்படிப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
Mar 23, 2022, 11:51 am IST
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. அதில் 26 அறிவிப்புகள் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என கைவிடப்பட்டுள்ளது.
Mar 23, 2022, 11:51 am IST
இதேபோல் 20 அறிவிப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணையே பிறப்பிக்கப்படவில்லை. மேலும், 143 அறிவிப்புகளுக்கு அரசாணை மட்டும் பிறப்பிக்கப்பட்டு நிதியை விடுவிக்கவில்லை.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் புள்ளி விவரத்துடன் பேச்சு
Mar 23, 2022, 11:38 am IST
திமுக ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் பட்டியலிட்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Mar 23, 2022, 11:29 am IST
தமிழகத்தின் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (ஐடி பார்க்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
Mar 23, 2022, 11:28 am IST
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 36 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம் - சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் தகவல்.
Mar 23, 2022, 11:10 am IST
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், உதயநிதி ஸ்டாலினை 'இளைய கலைஞர்', 'இளைய சூரியன்' எனக் குறிப்பிட்டு புகழாரம் சூடினார்.
READ MORE
11:18 AM, 21 Mar
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியது
மறைந்த உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல்
மறைந்த உறுப்பினர்களுக்கு எம்எல்ஏக்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி
11:18 AM, 21 Mar
சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன் வருமா- எம்எல்ஏ அருள்
தமிழக சட்டசபையில் எம்எல்ஏ அருள் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்பதே இந்த அரசின் நோக்கம் - முதல்வர்
11:19 AM, 21 Mar
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது
சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
11:19 AM, 21 Mar
என்று முடியும் இந்த சுதந்திர தாகம் போல் என்று முடியும் இந்த காவிரி போராட்டம்- துரைமுருகன்
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை போல் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் ஓடினாலும் தண்ணீருக்காக கையேந்த வேண்டிய நிலை இருக்கிறது- துரைமுருகன்
11:21 AM, 21 Mar
மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானம்!
11:23 AM, 21 Mar
எம்எல்ஏ அருள் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
11:25 AM, 21 Mar
எம்.எல்.ஏ சுதர்சனம் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்!
11:27 AM, 21 Mar
காவிரி பிரச்சினை - துரைமுருகன் பேச்சு!
11:31 AM, 21 Mar
நம்முடைய மகன், பேரன் காலம் வரை காவிரி போராட்டம் ஓயாது - துரைமுருகன்.
கர்நாடகா அரசின் முயற்சியை முறியடிக்க அனைவரும் ஒன்று படவேண்டும் - துரைமுருகன்
11:33 AM, 21 Mar
JUSTIN |
தமிழக உரிமைகளை விட்டுத்தரமாட்டோம்
11:34 AM, 21 Mar
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேச்சு.
கர்நாடகா அணை கட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடாது என அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேச்சு.
கர்நாடக முதல்வரின் பேச்சு இருமாநிலங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் என குற்றச்சாட்டு
11:47 AM, 21 Mar
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.
சட்டசபையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தீர்மானத்திற்கு ஆதரவு தருவதாக பேச்சு
11:51 AM, 21 Mar
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தின் மீது சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
11:52 AM, 21 Mar
காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களில் வாழ்வாதாரமாக இருக்கிறது - எடப்பாடி பழனிச்சாமி
12:06 PM, 21 Mar
JUSTIN |
தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு!
12:08 PM, 21 Mar
JUSTIN |
தனித்தீர்மானம் - அதிமுக ஆதரவு!
12:08 PM, 21 Mar
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
12:22 PM, 21 Mar
BREAKING |
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!
12:23 PM, 21 Mar
JUSTIN |
‘ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி’
4:08 PM, 21 Mar
JUSTIN |
தாலிக்கு தங்கம் திட்டம் ஏன் ரத்து? - முதல்வர் விளக்கம்
11:20 AM, 22 Mar
யாசகம் கேட்போர் மறுவாழ்வு இல்லம் நடத்த முன் வரும் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு 75% மாணியம் தரும்.
சட்டப்பேரவையில் சமூகநலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தகவல்
12:42 PM, 22 Mar
அமைச்சர் தான் பேருந்து விடுவதாக கூறிவிட்டாரே, நன்றி சொல்லிவிட்டு அமருங்கள் என மதுரவாயல் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணபதியை சபாநாயகர் அப்பாவு அமரவைத்தார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் ரகுபதி
12:47 PM, 22 Mar
''தயவு செய்து மூலக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் துணைக் கேள்வி எழுப்பாதீர்; நீங்க 5 வருடமாக வனத்துறை அமைச்சராக இருந்தும் இந்த விவரம் கூட தெரியாதா உங்களுக்கு தெரியவில்லையே'' -அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சபாநாயகர் வேதனை
1:22 PM, 22 Mar
தமிழகத்தை 'பசுமை மாநிலமாக' மாற்ற முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
10:12 AM, 23 Mar
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 5-ம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
சபை தொடங்கியதும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பேச வாய்ப்பு தரும் விவகாரத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது
10:19 AM, 23 Mar
சட்டப்பேரவையில் ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகய்யா முதலமைச்சர் ஸ்டாலினையும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனையும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ''கேள்வி, கேள்வி.. கேள்விக்கு வாங்க'' என அறிவுறுத்தினார்.
10:35 AM, 23 Mar
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, ''முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்'' என்பதை மீண்டும் மீண்டும் தனது அனைத்து பதில்களிலும் குறிப்பிட்டார்.
10:39 AM, 23 Mar
'சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்' -அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூனன் பேச்சால் கோபமடைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
11:10 AM, 23 Mar
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், உதயநிதி ஸ்டாலினை 'இளைய கலைஞர்', 'இளைய சூரியன்' எனக் குறிப்பிட்டு புகழாரம் சூடினார்.
11:28 AM, 23 Mar
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 36 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம் - சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் தகவல்.