2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே இருக்கும் நிலையில், 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கும், தோல்வி அடைந்த அதிமுக கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறித்து பார்க்கலாம். இதன் மூலமாக இந்த தேர்தலில் பல்வேறு விஷயங்களையும், கூட்டணி கணக்குகளையும் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே இருக்கின்றன. ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்காக அத்தனை கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கும், தோல்வி அடைந்த அதிமுக கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்பாக பார்க்கலாம். கடந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 45.7 சதவிகித வாக்குகளுடன் 159 தொகுதிகளை கைப்பற்றியது. அதேபோல் தோல்வியடைந்த அதிமுக கூட்டணி 40 சதவிகித வாக்குகளுடன் 75 தொகுதிகளை வென்றது.
இதில் திமுக மட்டும் 188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 133 தொகுதிகளில் வென்று 38 சதவிகித வாக்குகளை பெற்றது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்று 4.3 சதவிகித வாக்குகளை பெற்றது. விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்று 1 சதவிகித வாக்குகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 6 போட்டிகளில் போட்டியிட்டு 1.1 மற்றும் 0.9 சதவிகித வாக்குகளையும் பெற்றது.
அதேபோல் அதிமுக மொத்தமாக 191 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளில் மட்டுமே வென்று 33.5 சதவிகித வாக்குகளை பெற்றது. அதேபோல் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5ல் வென்று 3.8% வாக்குகளையும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4ல் வென்று 2.6% வாக்குகளையும் பெற்றது. இதன் மூலம் மொத்தமாக அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளாக 40% உள்ளது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையிலான வாக்கு சதவிகித வித்தியாசம் மட்டும் 5.7%ஆக இருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டும் 6.6% வாக்குகளையும், 4வது முனையாக இருந்த மக்கள் நீதி மய்யம் 2.6% வாக்குகளையும், அமமுக 2.4% வாக்குகளையும், தேமுதிக 0.4% வாக்குகளையும் பெற்றது.
கடந்த தேர்தலில் நாதக, மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக கூட்டணி பெற்ற வாக்குகள் மட்டும் சுமார் 12% வாக்குகளாக இருக்கின்றன. இம்முறை விஜய் தலைமையிலான தவெக தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகளில் சீமான் மற்றும் விஜய் பிரிக்கும் வாக்குகள் முக்கிய பங்காற்றும் என்று பார்க்கப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications