திருவையாறு தொகுதியில் யாருக்கு சீட்? சீனியருக்கு டஃப் தரும் ஜூனியர்!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில், திமுக சார்பில் வேட்பாளராக களமிறங்க பலரும் முட்டி மோதுவதால் இப்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சிவாஜி கணேசன்
தமிழ்நாட்டின் மற்ற சட்டமன்றத் தொகுதிகளை காட்டிலும் திருவையாறு தொகுதிக்கென்று தனிப்பெரும் வரலாறு ஒன்று உள்ளது. அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்த தொகுதி திருவையாறு ஆகும். அன்று சிவாஜி கணேசனை திருவையாறில் தோற்கடித்த துரை சந்திரசேகரன் இன்றும் அதே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

சீனியர் Vs ஜீனியர்
திமுக சார்பில் 7 முறை போட்டியிட்டு 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற துரை சந்திரசேகரன், திமுகவில் சீனியர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். மாவட்டச் செயலாளராகவும், கால் நூற்றாண்டுக் கால எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் இவர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். இந்நிலையில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் முகில் வேந்தன் திருவையாறு தொகுதியில் களமிறங்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சீட் ரேஸ்
உதயநிதி ஸ்டாலின் கோட்டாவில் திமுக இளைஞரணிக்கு 40 சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் திருவையாறு தொகுதியும் உள்ளடங்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்துள்ள முகில் வேந்தன் சீட் ரேஸில் முந்துகிறார். புத்தகப் பதிப்பகம், கல்வி நிலையம் உள்ளிட்ட தொழிலில் முகில்வேந்தன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதால் தொகுதிக்குள்ளும் ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் பூதலூர் சேர்மன் கல்லணை செல்லக்கண்ணு, களிமேடு செல்வம், உள்ளிட்ட இன்னும் சிலரும் எப்படியும் இந்த முறை சீட் வாங்கிவிட வேண்டும் என காய் நகர்த்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஷத் கான்
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications