TN Assembly LIVE: காரசார வாத விவாதங்களுக்கு பிறகு நிறைவடைந்தது சட்டசபை கூட்டத் தொடர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபை இரண்டு நாட்கள் நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஆளுநர் அப்பாவு தள்ளி வைத்தார்.

காவல்துறை யாருடைய ஆட்சி காலத்தில் ஏவல்துறையானது என ஸ்டாலின் கேள்வி.
தூத்துக்குடியில் 13 பேரை துள்ளத்துடிக்க சுட்டுக்கொன்றது யார்.
எந்த வழக்கு பாயும் என பயப்படுபவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை.
போதைப் பொருள் கடத்தல் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதிமுக குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்.
அம்மா கிளினிக் என்று பெயர் மட்டும்தான் உள்ளது எதுவும் இல்லை.
அம்மா உணவகம் மூடப்படாது என்று சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு.
புதிதாக கட்டப்பட்ட சட்டசபையை மருத்துவமனையாக மாற்றியது யார் என முதல்வர் கேள்வி.
செம்மொழிப்பூங்காவில் கருணாநிதி பெயர் மறைக்கப்பட்டது.
கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் சமத்துவமபுரம் பாழடிப்பு.
உழவர் சந்தைகளை மூடியதும் வரும் முன் காப்போம் திட்டத்தை முடக்கியதும் யார் என கேள்வி
சங்கரன்கோவில் பகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்க எம்எல்ஏ ராஜா கோரிக்கை.
ஜவுளிப்பூங்கா அமைக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என கைத்தறித்துறை அமைச்சர் பதில்.
சங்கரன்கோவிலில் பருத்திக்கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என எம்எல்ஏ கேள்வி.
பருத்திக்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் பதில்
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்வர் அறிவிப்பு
நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் - மு.க.ஸ்டாலின்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேச்சு.
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும் என ஸ்டாலின் அறிவிப்பு.
நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக பேச அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு
கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சட்டசபையில் முதன் முறையாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி கேள்வி எழுப்பினார்
மெட்ரோ ரயில் சேவை வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா என திமுக எம்எல்ஏ கருணாநிதி கேள்வி
எல்எல்ஏ கருணாநிதியின் கேள்விக்கு முதல்வர் மு.க . ஸ்டாலின் பதிலளித்தார்
READ MORE









Click it and Unblock the Notifications
