Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் உரை ஆரம்பித்ததும்.. எங்கள் நாடு தமிழ்நாடு என கோஷமிட்ட திமுக கூட்டணி எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் கூட்டத் தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் தனது உரையை தொடங்கிய ஆளுநர் வாழிய செந்தமிழ் , ஜெய்ஹிந்த் என கூறி தமிழிலேயே தனது உரையை முடித்தார். ஆளுநர் தனது உரையை தொடங்கிய போது அவரை பேச விடாமல் உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் முதல் வாரத்தில் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு தனது உரையை தொடங்கினார்.

இதற்காக அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சட்டசபைக்கு வந்தார். 9.50 மணிக்கு சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். ஆளுநருக்கு பேண்டு வாத்தியத்துடன் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ஆளுநர் சட்டசபை

ஆளுநர் சட்டசபை

இதன் பின்னர் ஆளுநர் சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். ஆளுநர் வந்ததும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கின.

தமிழில் உரை

தமிழில் உரை

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை தமிழில் தொடங்கினார். அவர் தனது உரையில் மதிப்பிற்குரிய பேரவைத் தலைவர் அவர்களே, முதல்வர் அவர்களே சட்டசபை உறுப்பினர்களே என கூறியதுடன் பொங்கல் வாழ்த்துகளை கூறி தமிழிலே தனது உரையை தொடங்கினார். அப்போது விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆளுநரை பேச விடாமல் தொடர்ந்து கூச்சலிட்டன. எங்கள் நாடு தமிழ்நாடு என முழக்கமிட்டனர். இதையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவை அமைதியாக இருக்கும் நிலையில் ஆளுநர் தன் உரையை தொடர்ந்தார்.

 காகிதம் இல்லாத உரை

காகிதம் இல்லாத உரை

வழக்கமாக ஆளுநர் உரை என்பது புத்தகமாக தயாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. இதைத்தான் ஆளுநர் படித்தார். ஆளுநர் தனது உரையில் கூறியிருப்பதாவது, நீட் தேர்வு உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் இருந்து வருகிறது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கிறது. காலை உணவு திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது. பெரியார் நினைவு சமத்துவபுரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையில் தற்காலிக தேவைக்கேற்ப ஐடிஐகளில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். கீழடி அருங்காட்சியகம் போல பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். வளர்ந்த நாடுகளைப் போல தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானதாக அரசு கருதுகிறது என கூறிய ஆளுநர் வாழிய செந்தமிழ்..ஜெய் ஹிந்த் என்று கூறி தனது உரையை வாசித்து முடித்தார்.

சட்டசபை கூட்டம்

சட்டசபை கூட்டம்

ஆளுநர் உரை முடிந்தவுடன் அவர் பேசியதை சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இதைத் தொடர்ந்து இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வார்கள். அவை தொடங்குவதற்கு முன்னதாக சட்டசபை வளாகத்தில் எம்எல்ஏ திருமகனின் உருவப்படம் தொடங்கி வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+