கொரோனா காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
சென்னை : கொரோனா காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Recommended Video
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிய உரையுடன் தொடங்கி ஆளுநர் உரையுடன் முடிவடைந்தது. அதன்பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

ஆளுநர் உரை
சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழக அரசு சார்பில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 6,230 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும், கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாகவும் ஆளுநர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் எனவும், கொரொனா பேரிடர்காக 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கொரொனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா
இந்த கூட்டத்துக்குப் பின், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, '' ஆளுநர் உரைக்குப் பிறகு, அலுவல் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டர். அந்தக் கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், சட்டமன்றக் கூட்டத்தொடரை இரண்டு நாட்களில் முடிக்கலாம் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாட்கள் நடக்கும்
நாளை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரித்து, ஆளுநர் உரைமீது விவாதம் நடைபெறும். இன்னும் இரண்டு நாட்கள் தான் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். சட்டமன்றத்தில் நாளை காலை வினாக்களுக்கு விடையளிக்கப்படும். யாரெல்லாம் பேசலாம் என்பதை நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு கேள்வி பதில் கூட்டம் சுருக்கமாக இருக்கும்பட்சத்தில் அமையும்.

வெளிநடப்பு
சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையுடன் கூட்டம் நிறைவுறும். '' என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications