சனாதனம், சட்டம் ஒழுங்கு.. அனல் பறக்குமா அக்டோபரில் கூடும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ள நிலையில் அதுகுறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அது போல் அமைச்சர்கள் பலர் பேசும் கருத்துகள் மீது எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது உள்ளிட்ட பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் தற்போது அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

அதாவது கடந்த மார்ச் மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடரானது தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிந்தது. இந்த கூட்டத் தொடரின் போது ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மீதான விவாதம் என 26 நாட்கள் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தொடர் நடந்து முடிந்த 6 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு கூட்டத் தொடரை கூட்ட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் 3 , 4 ஆகிய தேதிகளில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு முடிந்தவுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறித்தும் டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சர் பதவியில் உள்ளது குறித்தும் பேசப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத் தொடருக்கு முன்பு அமைச்சரவையும் கூடவுள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சட்டசபையில் அதிமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது. அது போல் சனாதன சர்ச்சை குறித்து பாஜக எழுப்ப திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறித்த கோரிக்கை மீதும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications