ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2027-27ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ள சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நேரலை செய்ய அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், ஜூன் மாதம் 18ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அடுத்த 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. கடைசி நாளன்று ஆளுநர் உரைக்கு முதல்வர் விஜய் பதிலுரை கொடுத்தார்.

Speaker JCD Prabhakar

இதன்பின் தமிழக அரசின் பொது பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப முதல்வர் விஜய் தொடர்ச்சியாக பட்ஜெட் தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்த நிலையில் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்ய உள்ளனர். தவெக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். இதன்பின் மாரியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.

மேலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் நேரலையை முழுமையாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். கடந்த முறை சில பிரச்சனைகள் ஏற்பட்ட சூழலில், இம்முறை அது தவிர்க்கப்படும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனிடையே பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+