"அரசியல் வேண்டாமே!" இலங்கையில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதிய கடிதம்.. என்னாச்சு
சென்னை: இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கிருந்தபடியே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அண்டை நாடான இலங்கையில் வரலாற்றின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமா அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது
அதேபோல மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை இலங்கை பயணம்
இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் உதவிக் கரம் நீட்டியுள்ளன. தமிழ்நாடு அரசும் இலங்கையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தனிநபர் தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள அவர் அங்குள்ள தமிழர்களைச் சந்திக்க உள்ளார்,

அண்ணாமலை கடிதம்
இதனிடையே அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், "தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். இந்த தருணத்தில் சொல்லுதல் யார்க்கும் எளிய... என்ற திருக்குறளை நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க 'ஆபரேசன் கங்கா' திட்டத்தைப் பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. அதேபோன்ற செயலாக தற்போதைய தீர்மானமும் மாறிவிடக்கூடாது.

மாய தோற்றம்
2009ல், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் தி.மு.க அரசும் ஆட்சியில் இருந்தும், தமிழ் மக்களை யுத்த வலயத்தில் இருந்து மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் போர் நிறுத்தத்திற்காக திமுக கடுமையாக உழைத்தது என்ற மாயக்கதையை உருவாக்கியதை போல் இந்தத் தீர்மானம் 2 மணிநேர வேகமான சூழ்நிலையை உருவாக்கி மற்றொரு சாதனையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் கவலை.

உதவிகள்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை வழங்கியது.

இந்தியா உதவி
ஒட்டுமொத்த அடிப்படையில், 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்திய ஆதரவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூடுதலாக 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை உயர்த்த உதவும். பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவியாகக் குறுகிய கால கடனாக இந்தியா 500 பில்லியன் டாலர்கள் வழங்கியது. நவம்பரில் 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும் வழங்கி இருப்பதைக் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications