"தமிழகத்தில் லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது!" திடீரென பொங்கி எழுந்த அண்ணாமலை! பின்னணி
சென்னை: தமிழகத்திற்கு வரும் முக்கிய அந்நிய நேரடி முதலீடு ஒன்று குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க துபாய் நாட்டிற்குச் சென்றிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

லூலூ குரூப்
முதல்வர் ஸ்டாலினின் இந்த துபாய் பயணத்தில் 6 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாகத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இந்த 6 நிறுவனங்களில் அதிகப்படியாகக் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 3500 கோடி ரூபாயைத் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் லூலூ முதலீடு
தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த ஹைப்பர் மார்கெட்டுகள் திறக்கப்பட உள்ளது. கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் லூலூ குரூப் சார்பில் முதல் ஹைபர் மார்க்கெட் தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் வரும் 2024ஆம் ஆண்டில் சென்னையில் புதிய ஷாப்பிங் மாலை கொண்டு வர லுலு குழுமம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்துள்ள லூலூ நிறுவனத்தின் முதலீடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வணிகர்கள்
அமெரிக்கா, ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா, சீனா என மொத்தம் 22 நாடுகளில் சுமார் 230 மால்களை லூலூ நிறுவனம் கொண்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு கொச்சியில் தொடங்கப்பட்ட லூலூ மால் தான் நாட்டின் மிகப் பெரிய மால்களில் ஒன்றாக உள்ளது. அதேநேரம் லூலூ மாலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். லூலூ ஹைபர் மார்கெட் தமிழகத்தில் வந்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மாநிலத்தில் உள்ள வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை அட்டாக்
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக பாஜக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் லூலூ மாலின் ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்று சாடி உள்ளார். மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளைப் பாதிக்கும் லுலு நிறுவனத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications