இப்போது அறிவிப்பு இல்லை.. தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான்.. சி.பி ராதாகிருஷ்ணன் ஷாக்கிங்!

தமிழக பாஜகவிற்கு இப்போது கூட்டு தலைமை நிலவி வருகிறது, இன்னும் சில நாட்களுக்கு அது தொடரும் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TN BJP leader seems to be lingering

    சென்னை: தமிழக பாஜகவிற்கு இப்போது கூட்டு தலைமை நிலவி வருகிறது, இன்னும் சில நாட்களுக்கு அது தொடரும் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று இருக்கிறார். இதனால் தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த் தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. விரைவில் தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    யார் வருவார்

    யார் வருவார்

    தமிழக பாஜகவிற்கு யார் தலைவராவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது அது தொடர்பாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழக பாஜகவிற்கு இப்போது வரை தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

    ஆலோசனை

    ஆலோசனை

    இது தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட குழு ஆலோசனை செய்து வருகிறது. அவர்களிடம் அளிக்கப்பட்டு இருக்கும் பரிந்துரையை ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. தகுதியான தலைவரை அவர்கள் தேர்வு செய்வார்கள்.

    கூட்டு தலைமை

    கூட்டு தலைமை

    அதுவரை தமிழக பாஜகவிற்கு இடைகால தலைவர் நியமிக்கப்பட மாட்டார். உயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான். மூத்த உறுப்பினர்கள் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் கட்சியில் பின்பற்றப்படும்.

    நாளை முடிவு

    நாளை முடிவு

    தமிழக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும். தமிழக பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். அதேபோல் வேட்பாளர் குறித்தும் நாளை அறிவிக்கப்படும், என்று சி. பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+