Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூய்மையான இந்தியா.. சோழிங்கநல்லூரில் டாய்லெட்டை சுத்தம் செய்த.. பாஜக தலைவர் அண்ணாமலை.. வைரல் படங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: swachh bharat எனப்படும் தூய்மையான இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்தார். இது தொடர்பான போட்டோக்களையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

swachh bharat திட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களிடையே விளக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அன்று தொங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூய்மைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

swachh bharat திட்டம்

swachh bharat திட்டம்

swachh bharat எனப்படும் இந்த தூய்மையான இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களை தூய்மையாக வைத்திருக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பிரமதர் மோடி தலைமையான பாஜக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த swachh bharat திட்டம் பார்க்கப்படுகிறது. பல்வேறு சமயங்களில் பிரதமர் மோடியே பொது இடங்களைச் சுத்தம் செய்த இந்த தூய்மையான இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த திட்டம் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி. இந்தியா தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நாம் நினைவாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையம், வாரணாசி அசிகாட் போன்ற இடங்களில் பிரதமர் மோடியே தூய்மைப்படுத்தும் பணிகளில் பங்கேற்றுள்ளார்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

பிரதமர் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தலைவர்களும் இந்த தூய்மையான இந்தியா திட்டத்திற்கு தங்கள் ஆதரவு தெரிவித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாட்டின் பல இடங்களில் தூய்மையான இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Recommended Video

    10 நாள்தான் கெடு.. தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவில் எங்கள் வேலைகள் இருக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை
    கழிப்பறையைச் சுத்தம் செய்த அண்ணாமலை

    கழிப்பறையைச் சுத்தம் செய்த அண்ணாமலை

    அப்படி சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அங்கு உள்ள பொது கழிவறையை அவரே துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பொது கழிப்பறையைச் சுத்தம் செய்துள்ளார்.

    நம்ம கடற்கரை, நம்ம சென்னை

    நம்ம கடற்கரை, நம்ம சென்னை

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 199 இல் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள பூத் எண் 614 இல் கழிப்பறை சுத்தம் செய்யும் குழுவில் நானும் ஒருவரான கழிவறையைச் சுத்தம் செய்தேன். இந்த 'நம்ம கடற்கரை, நம்ம சென்னை' குழு தன்னார்வலர்களின் உதவியுடன் 5 கிமீ நீளத்திற்குக் கடற்கரைகள் மற்றும் பொது கழிப்பறைகளைப் பராமரிக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான போட்டோக்களையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அண்ணாமலையின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், இது தொடர்பான போட்டோக்களையும் இணையதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+