Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட! அண்ணாமலையை புறக்கணிக்கலை.. இமாச்சல பிரதேச தேர்தலில் வானதி சீனிவாசன் சூறாவளி பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கோவை பயணம், சென்னை போராட்டங்களை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் ஃபேஸ்புக்கில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சைலண்ட் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நவம்பர் 12-ம் தேதி ஹிமாச்சல்பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அம்மாநில தலைநகர் சிம்லா வந்திருக்கிறேன். ஹிமாச்சலில் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 'விஜய சங்கல்ப ஜன் சபா' என்ற பெயரில், 68 தொகுதிகளிலும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் எனக்கு, சிம்லா நகர் சிம்லா ஊரகம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. சிம்லா ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகன் விக்கிரமாதித்ய சிங் போட்டியிடுகிறார். வீரபத்திர சிங் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி ராணி பிரதிபா சிங், காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருக்கிறார். அவர், இப்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

சிம்லா கிராமின் தொகுதி வீரபத்திர சிங் மூன்று முறை வென்ற தொகுதி. கடந்த தேர்தலில் அவரது மகன் விக்கிரமாதித்ய சிங் வென்றார். இந்த முறையும் அவர்தான் காங்கிரஸ் வேட்பாளர். அவரை எதிர்த்து பா.ஜ., மாவட்ட தலைவர் ரவி மேத்தா போட்டியிடுகிறார். முன்னாள் ஏ.பி.வி.பி., ஊழியர். மிகச்சாதாரணமாக குடும்பத்தைச் சேர்ந்தவர்.

300 பேர் பொதுக் கூட்டம்

300 பேர் பொதுக் கூட்டம்

தமிழகம் போன்ற மாநிலங்களில் பொதுக்கூட்டம் என்றால் 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். அப்படி கூடினால்தான் அது பொதுக்கூட்டம். ஆனால், மலைப்பகுதியில் அமைந்துள்ள, சிறிய மாநிலமான ஹிமாச்சலில், 300 பேரை தாண்டினாலே பெரிய கூட்டமாகவே சொல்கிறார்கள். ஏனெனில், ஹிமாச்சலின் மொத்த மக்கள் தொகையே 71 லட்சம் தான். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 70 ஆயிரம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் வரைதான் இருக்கும். சிம்லா ஊரக தொகுதியில் நான் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் 700-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

 சிம்லா தொகுதியில் பிரசாரம்

சிம்லா தொகுதியில் பிரசாரம்

மதிய உணவுக்குப் பிறகு சிம்லா நகர் தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். சிம்லா நகரின் மத்தியப் பகுதியில், பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த, மால் சாலை (Mall Road) பகுதியில் தான் கூட்டம் நடைபெற்றது. இங்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதனால், நடந்தே சென்றோம். அது மிக முக்கியமான சுற்றுலா இடம். இங்கிருந்து சிம்லாவின் இயற்கை எழிலை காண முடியும் என்பதாலும், பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் இருப்பதாலும் வாகனங்களை அனுமதிக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். சிம்லா நகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மாநிலப் பொருளாளர் சஞ்சய் சூத் போட்டியிடுகிறார். மாநகராட்சி உறுப்பினராக இருந்தவருக்கு, முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பா.ஜ.க. எப்போதும் வெற்றி பெறும் தொகுதி. கடந்த 2017 தேர்தலில் இங்கு பா.ஜ.க. சார்பில் வென்ற அமைச்சரான சுரேஷ் பரத்வாஜ், இப்போது பக்கத்து தொகுதியில் போட்டியிடுகிறார். 80 வாக்காளர்கள் உள்ள தொகுதி. மகளிரணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் வந்திருந்தனர். இங்கும், ஹிமாச்சலின் வளர்ச்சி தடைபடாமல் இருக்க, பா.ஜ.க. அரசு நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினேன்.

 இமாச்சல் சுவாரசியம்

இமாச்சல் சுவாரசியம்

கூட்டம் முடிந்ததும் அங்குள்ள இந்தியன் காபி ஹவுஸில், நிர்வாகிகளுடன் காபி குடிக்க சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் தவிர்த்து விட்டோம். ஹிமாச்சல் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது, இந்த இந்தியன் காபி ஹவுஸில்தான் அடிக்கடி காபி குடிப்பாராம். பிரதமரான பிறகும் இங்கு வந்து காபி குடித்திருக்கிறார் என்பதை அங்குள்ளவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். இந்தியன் காபி ஹவுஸிலிருந்து வரும் வழியில், மால் சாலையும், ரிட்ஜ் (Ridge Road) சாலையும் சந்திக்கும் இடத்தில், 'ஸ்கேன்டல் பாயின்ட்' (Scandal Point) என்றொரு இடம் இருந்தது. இதுபற்றி உடனிருந்த மகளிரணி நிர்வாகிகளிடம் ஆர்வமுடன் விசாரித்தேன். 18-வது நூற்றாண்டில் ஆங்கிலேயே வைஸ்ராய் ஒருவரின் மகளை, பாட்டியாலா மகாராஜா ஒருவர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.இதனால் கோபமடைந்த வைஸ்ராஸ், பாட்டியாலா மகாராஜா சிம்லாவில் நுழைய தடை விதித்ததோடு, அவர் இருந்த இடத்திற்கு ஸ்'கேன்டல் பாயின்ட்' என பெயர் வைத்து விட்டாராம். சுவாரஷ்யமாக இருந்தது. அங்கு மிக அழகான நிழற்குடை வைத்திருக்கிறார்கள். அங்கு காதலர்கள் நின்று விதம் விதமாக படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இமாச்சலின் கின்னோர் ஆப்பிள்

இமாச்சலின் கின்னோர் ஆப்பிள்

ஹிமாச்சல்பிரதேசம் என்றாலே ஆப்பிள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஹிமாச்சல் என்றதுமே நமக்கு சிம்லா ஆப்பிள்தான் தெரியும். ஆனால், இங்கு ஒவ்வொரு பகுதியிலும் விளையும் ஆப்பிளுக்கும், தனித்த சுவை உண்டு. குளு ஆப்பிள், கின்னோர் ஆப்பிள் என புகழ்பெற்ற பல வகை ஆப்பிள்கள் உள்ளது என்றார்கள். ஜூலை முதல் நவம்பர் வரை தான் ஆப்பிள் சீசன். இப்போது சீசன் முடியும் காலம். சீசன் முடிந்து விட்டால் ஆப்பிள் தோட்டப் பணியாளர்கள், நகர்ப் புறங்களில் கிடைத்த வேலைகளை செய்வார்கள் என்று சொன்னார்கள். சீசன் முடியும் நேரத்தில் கிடைக்கும் கின்னோர் ஆப்பிள் (Kinnaur Apple) தான், இங்கு புகழ் பெற்றது என்றார்கள். மிக உயரமான மலைப் பகுதியில் விளையும் ஆப்பிள் என்பதால், இதன் சுவை மிகமிக அதிகமாக இருக்கும் என்றார்கள். உயரமான இடத்தில் விளைவதால் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்த மாட்டார்களாம். அதனால் கின்னோர் ஆப்பிள் என்றாலே அது, ஆர்கானிக் ஆப்பிள் என்கிறார்கள். நானும் கின்னோர் ஆப்பிள் சாப்பிட்டேன். அப்படியொரு மணம். கின்னோர் ஆப்பிளின் மணம், நான் பயணம் செய்த காரில் நீண்ட நேரம் வீசிக் கொண்டிருந்தது. இயற்கையின் அற்புதமே தனி தான். சிம்லா ஆப்பிளில் மாவு தன்மை அதிகம், கடித்து சாப்பிட இதமாக இருக்கும்.

இமாச்சல பிரதேச கள நிலவரம்

இமாச்சல பிரதேச கள நிலவரம்

ஹிமாச்சலில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையேதான் போட்டி. பா.ஜ.க., காங்கிரஸ் என மாறிமாறி மக்கள் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தே பாரத் ரயில், சாலைகள், நானகு வழிச்சாலைகள், விமான நிலையம் என உள்கட்டமைப்பு திட்டங்கள், மின் உற்பத்தி திட்டங்கள் என வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இதனை மக்கள் உணர்ந்திருப்பதால், மீண்டும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருப்பதை எனது பயணத்தில் தெளிவாக பார்க்க முடிந்தது. பா.ஜ.க.வின் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டாவின் சொந்த மாநிலம் என்பதால் அவரும், ஹிமாச்சலில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்.நீண்ட காலமாகவே பா.ஜ.க.வுக்கு ஆதரவான மாநிலம் ஹிமாச்சல்பிரதேசம். ஆரம்பகட்டத்திலேயே பா.ஜ.க. ஆட்சி அமைந்த மாநிலம். ஜனசங்கத்தில் இருந்த பல நிர்வாகிகளை இந்த பயணத்தில் சந்திக்க முடிந்தது. ஹிமாச்சலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிதான் என்ற மகிழ்ச்சியில், ஹரியானாவின் கால்கா என்ற இடத்திற்கு வந்து, இரவு தங்கிவிட்டு, காலையில் சண்டிகரில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி வந்தடைந்தேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+