திமுகவுக்கு வெள்ளைக்காரங்களே பரவாயில்லை.. கோவிலை ஒழுங்கா வெச்சிருந்தாங்க.. அண்ணாமலை
சென்னை: திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா வைத்திருந்தனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று சனிக்கிழமையன்று தமிழ்நாடு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.

இப்போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: இந்து கோவிலில் ஒரு எண்ணெய் வாங்குவதற்கு கூட இஓ கையெழுத்து போட்டால்தான் முடியும். என்னய்யா காலக் கொடுமை? சூடம், பத்தி வாங்குவதற்கு கூட இஓ கையெழுத்து. திமுகவுக்கு வெள்ளைக்காரங்களே பரவாயில்லை. அவனாவது கோவிலை கொஞ்சம் ஒழுங்கா வெச்சிருந்தான். யாரையும் திருடவிடாமல் பார்த்துக் கொண்டான். இதை எல்லாம் கேள்வி கேட்போம் தொடர்ந்து பேசுவோம்.. இது ஆரம்பம்தான்.
மக்களாக முன்னால் வந்து இந்துசமய அறநிலையத்துறையே வேண்டாம் சாமீ என சொல்ல வேண்டும். நாங்களே நிர்வாகம் செய்து கொள்கிறோம் என மக்களே சொல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவில் இருந்து இப்பதான் 3 ஆண்டுகளுக்கு முன்னர் டோனி அபோட், பிரதமர் மோடியிடம் ஒரு அற்புதமான நடராஜர் சிலையை கொடுத்துவிட்டு சென்றார். இது எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது உங்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னார் டோனி அபோட். இன்றைக்கு 200க்கும் மேல டிஸ்பியூட்டில் இருக்கிறது.

திமுக 6 முறை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. திமுக ஆட்சியில் ஒரே ஒரு சிலையை மீட்டு கொண்டு வந்ததற்கு, முயற்சி எடுத்ததற்கு டாக்குமெண்ட்டை திமுக ரிலீஸ் செய்யனும். பேச்சுக்கு மட்டும் இந்துக்கு பாதுகாவலனாக இருக்கிறேன். இந்துக்களுக்கு துணை இருக்கிறேன் என்கிறது திமுக. உங்களுக்கு தேவை உண்டியல். கண்ணு உண்டியல்லதான் இருக்கு. கோவிலில் 6 கால பூஜை எப்படி நடக்கனும், அந்த மரபை எப்படி கடைபிடிக்கனும் என்கிற ஆசை இல்லை.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நமது உறவினர்கள் கடவுளுக்கு வேண்டிகொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த கணக்கு தணிக்கை அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனில் 5,309 மாடுகளைக் காணவில்லை என்பதுதான். அதாவது பக்தர்கள் மாடு கொடுத்ததற்கு பதிவுகள் இருக்கின்றன. ஆனால் யார் ஏலம் விட்டது? யார் மாடுகளை சைடில் திருடி திமுக கிளைச் செயலாளருக்கு எல்லாம் கொடுத்தனர்? 5,309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் காணவில்லை. வடிவேலு கிணத்தை காணோம் என்று சொன்னது போல திருச்செந்தூரில் மாடுகள் காணாமல் போயிருக்கின்றன. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications