நீங்கள் அப்படி சொன்னா.. நாங்கள் இப்படி சொல்வோம்.. நீங்களும் மிரளக் கூடாது.. சரியா?.. தமிழக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றிய அரசு என அழைத்தால் மிரளக் கூடாது என கூறும் ஸ்டாலின் ஜெய்ஹிந்த் என சொன்னாலும் மிரளக் கூடாது என தமிழக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் மத்திய அரசு என்பதால் அதை ஒன்றிய அரசு என திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அழைத்து வருகிறார்கள். இதற்கு பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

எங்களை ஒன்றிய அரசு என அழைத்தால் நாங்கள் உங்களை ஒன்றிய முதல்வர் என அழைப்போம் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு என ஏன் அழைக்கிறோம் என்பதை விளக்கினார். அவர் கூறுகையில் ஒன்றியம் என்ற சொல் தவறான சொல் அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி உள்ளது.

சொல்

சொல்

அரசியலமைப்பு சட்டத்திலும் ஒன்றியம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை கண்டு யாரும் மிரள வேண்டாம். ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என ஸ்டாலின் விளக்கமளித்தார்.

தமிழக பாஜக

தமிழக பாஜக

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழக மேலிட பார்வையாளர் சி.டி. ரவி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பிறகு பேசிய தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் கூட்டத்தில் நிறைவற்றப்பட்ட 6 தீர்மானங்கள் பற்றி பேசினார்.

வழக்கு

வழக்கு

அப்போது கரு நாகராஜன், ஒன்றிய அரசு என அழைப்பதால் தமிழகத்திற்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா? ஒன்றிய அரசு என்பது பொது மக்களை திசை திருப்பும் முயற்சி. ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்குத் தொடரப்படும் என கரு நாகராஜன் தெரிவித்தார்.

ஹேஷ்டேக்

இந்த நிலையில் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்"
- ஸ்டாலின். "ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்த சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்"- மக்கள் என தெரிவித்துள்ளது. மேலும் ஜெய்ஹிந்த் என ஆங்கிலத்திலும் தமிழிலும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+