"கேசவனை நாம் வணங்குவோம்" நயினார் நாகேந்திரன் பாடிய பாடல்.. பின்னணியில் உள்ள ஆர்எஸ்எஸ் கனெக்ட்!
சென்னை: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்கும் போது, கேசவனை நாம் வணங்குவோம் என்று பாடலுக்கு பின் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அவரை தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கு ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டிய நிலையில், பதவியேற்பு மேடையிலேயே ஆர்எஸ்எஸ் பாடலை பாடி இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று இருக்கிறார். சென்னையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் தலைவர் பொறுப்பை ஏற்றார். நயினார் நாகேந்திரனை பதவிக்கு கொண்டு வருவதற்காக பாஜக தேர்தல் விதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவர் பதவிக்கு கொண்டு வருவதற்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் திராவிட கட்சி பின்னணியில் இருந்து 2017ஆம் ஆண்டுதான் பாஜகவிற்கு நயினார் நாகேந்திரன் வந்தார். அதேபோல் தீவிர இந்துத்துவத்தை நயினார் நாகேந்திரன் அதிகளவில் பேசியதில்லை.
இதனால் நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சமாதானம் செய்து மத்திய அமைச்சர் அமித் ஷா அவரை தலைவர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளார். இதன்பின் நேற்று நடைபெற்ற விழாவில் நயினார் நாகேந்திரன் ஆர்எஸ்எஸ் பாடலை பாடி பதவியேற்று கொண்டது பலரையும் ஆச்சரியம் கொள்ள வைத்துள்ளது.
அதில், அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்த போது, எனக்கு பொறுப்பு தரவில்லையே என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். இதனால் கேசவ விநாயகம் மீது கோபமும், வருத்தமும் இருந்தது. அதன்பின்னரே ஆர்எஸ்எஸ்-ல் பயிற்சி முகாமிற்கு சென்றேன். அதுதான் எனக்குள் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தது.
1925ஆம் ஆண்டு கேசவ பலிராம் ஹெட்கேவரால் உருவாக்கப்பட்ட சங்கம் அது. இந்த நேரத்தில் அவரை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். கேசவனை நாம் வணங்குவோம்.. அவர் பாதையிலே நாம் செல்லுவோம்.. லட்சியத்தை எய்து காட்டுவோம்.. வெற்றி நாட்டுவோம் என்று ஆர்எஸ்எஸ் பாடலை பாடினார். இதன் மூலமாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் ஆதரவை நயினார் நாகேந்திரன் முதல் மேடையில் இருந்து பெற முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications