பர்னிச்சரை உடைச்சு! இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே! கமலை கிண்டல் செய்த தமிழக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்தது குறித்து தமிழக பாஜக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

கமல்ஹாசன் நேற்றைய தினம் திமுகவுடன் கூட்டணி என அறிவித்துள்ளார். அதுவும் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லையாம். ஒரே ஒரு மாநிலங்களவ சீட்டை மட்டுமே பெற்றுள்ளார். கமல் தான் கட்சி தொடங்கியதிலிருந்தே திமுக, அதிமுகவுக்கு மாற்று என கூறியிருந்த நிலையில் அவரது இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu BJP teases Kamal Haasan for his alliance with DMK

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜக நிர்வாகி எச் ராஜா உள்ளிட்டோர் பேசுவதை டிவியில் கமல்ஹாசன் பார்ப்பதை போல் இருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது கமல் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போன்ற விளம்பரம் மக்கள் நீதி மய்யத்தால் கடந்த 2019 இல் வெளியானது.

கொந்தளித்த கமல்: அப்போது கமல் என்ன முடிவு செய்துட்டீங்களா, யாருக்கு ஓட்டு போட போறீங்க, குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழித் தோண்டி புதைத்தார்களே அவர்களுக்கா! இல்லை நம் உரிமைக்காக போராடிய போது நம்மை அடித்து துரத்தினார்களே அவங்களுக்கா? என கமல் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ அப்போதைய தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரும் ஆதரவு அலைகளை ஏற்படுத்தியது. வாக்கு சதவீதமும் அதிகரித்திருந்தது.

நம்பிக்கை: இதனால் மக்கள் நீதி மய்யம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் அந்த நேரத்தில் மநீமவுக்கு மாற்றி வாக்களித்தார்கள். இதனால் மநீமவின் வாக்கு சதவீதமும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையிலான ஒரு கூட்டணி உருவானது. இதில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்டவை இணைந்திருந்தன.

1000 வாக்குகள் வித்தியாசம்: மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வானதியை சந்தித்து போட்டியிட்டார். வெற்றிப்படிகளை தொட்டு பார்த்துவிட்டு பிறகு சர்ரென 1000 வாக்குகளில் தோல்விஅடைந்தார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரை விமர்சித்து அரசியல் செய்தாரோ அதே திமுகவுடன் இணைந்துள்ளது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மை: கமல்ஹாசன் தனது கட்சியினரிடம் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் ஆக்ரோஷமாக பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் பேசிய அந்த வீடியோவில் நேர்மையாக இருக்கவும் முடியும். அந்த மாதிரி அரசியல் செய்து ஜெயிக்கவும் முடியும் என்று நம்புபவர்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தில் இருக்க முடியும். அதில் சற்றே அவநம்பிக்கை இருந்தாலும் இன்னும் சில நொடிகளில் அந்த கதவு திறக்கும் என்கிறார். அப்போது கட்சி அலுவலக கதவுகள் திறப்பதை எல்லோரும் வியப்பாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமிழக பாஜக கிண்டல்: இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தான வீடியோவையும் தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் வரும் தேர்தலில் நானும் போட்டியிடவில்லை, என் கட்சியும் போட்டியிடவில்லை. ஆனால் திமுக கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் இருக்கும் என்றார்.

அப்போது ஒரு பேக்கிரவுண்ட் வாய்ஸ் வருகிறது. "அரசியலுக்கு வந்தாலும் அரசியல் மேடைகளிலும் தனது படம் ஷூட்டிங் மாதிரியே டிவி மேல் டார்ச் லைட் விட்டு எறிவது, சினிமா வசனங்களை பேசுவது , பல வித்தைகளை காட்டியும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தார்.

யூடர்ன் அடித்த கமல்: சினிமாவிலும் பிக்பாஸிலும் நடிச்ச நேரம் போக மிச்ச நேரத்தில் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த கமல்ஹாசன், போன தேர்தலில் எதையெல்லாம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தாரோ அதே திமுகவுடன் கூட்டணி வைத்ததுடன் ஒரே ஒரு மாநிலங்களவை சீட்டுக்காக அவரை நம்பி வந்த தொண்டர்களையே அடகு வைத்திருக்கிறார். இதுக்கு எதுக்கு யூடர்ன் அடிச்சு, பர்னிச்சரை உடைக்கணும்னு மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே" என அந்த பின்னணி குரல் முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+