ஸ்டாலினுக்கு விடுமுறை தின வாழ்த்து.. திருமாவுக்கு சீண்டல்.. இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாகவே, அதிரடியும், சரவெடியும், தடாலடியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தமிழக பாஜகவின் டுவிட்டர் கணக்கு.

புதுப் புது ஐடியாக்களுடன், அவர்கள் வெளியிடக்கூடிய புகைப்படம், தகவல், கேலி கிண்டலுடன் கூடிய வார்த்தைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. புதுப்பொலிவு பெற்றுள்ளது பாஜகவின் ஐடி விங் என்பதன் உதாரணம்தான் இது.

முன்பெல்லாம் தங்கள் கட்சித்தலைவர்கள் செல்லும் சுற்றுப்பயணம், அவர்களின் அறிக்கைகள் இப்படி ரொம்பவே பார்மல் ஆக இருந்த பாஜக ட்விட்டர் கணக்கு, இப்போது நக்கலும், நையாண்டியுமாகவும், பிற கட்சியினரை சீண்டுவதுமாகவும், 'லைவ்வாக' மாறியுள்ளது.

இரு மடங்கு அதிகம்

இரு மடங்கு அதிகம்

அகில இந்திய அளவில் பாஜக ஐடி விங் கில்லி. எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் எளிதாக டிரெண்ட் செய்து விடும் வல்லமை கொண்டவர்கள். அதே வரிசையில் தமிழக பாஜக ஐடி விங் தற்போது அதிரடி ஆரம்பித்துள்ளது. லோக்சபா தேர்தலில், இங்கே 9 தொகுதிகளை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டுவிட்டர் கணக்கை பின்பற்றுபவர்களை விடவும், ஒரு தொகுதியையும் வெல்லாத பாஜகவின் டுவிட்டர் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை சுமார் இரு மடங்காக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 95.9 ஆயிரம் பேர். அதேநேரம் பாஜகவை பின்பற்றுவோர் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

பாஜக ட்விட்டர் அட்மினின், துடுக்குத் தனத்திற்கு அளவில்லாமல் போய்க் கொண்டு உள்ளது. அதற்கு, உதாரணமாக இன்று சில விஷயங்களை பார்க்கலாம். இன்று விநாயகர் சதுர்த்தி. பாஜக மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சி தலைவர்களும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, முதல்வர், துணை முதல்வர் என அனைத்து தரப்புமே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு திமுக எப்போதுமே வாழ்த்து தெரிவிப்பது கிடையாது. விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. திமுக தொலைக்காட்சி சேனலில், இந்து பண்டிகைகளின் போது ஒளிபரப்பப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு, விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று பெயரிட்டு இருப்பார்கள்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து

இந்தநிலையில் திமுகவை சீண்டும் விதமாக, ஸ்டாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து உள்ள பாஜக தமிழக ட்விட்டர் தளம், "இனிய விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்" என்று சொல்லி, குசும்பு செய்துள்ளது. சி சி அறிவாலயம் என்று திமுகவின் கட்சி அலுவலகத்திற்கு டேக் செய்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற சீண்டல்களுக்கு, கர்நாடக பாஜக ட்விட்டர் தளம், புகழ்பெற்றது. எனவே அகில இந்திய அளவில் கர்நாடக பாஜக ஐடி விங் பேமஸ் ஆனது. இப்போது தமிழக பாஜக ஐடி விங்கும் அதுபோன்ற சீண்டல்களை, கையில் எடுத்துள்ளது.

திருமாவளவன்

மற்றொரு ட்வீட்டில், லண்டனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்றபோது, அவருக்கு எதிராக ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக ஒருவர் வீடியோவில் பேசக்கூடிய பதிவை, ஷேர் செய்துள்ளது பாஜக ட்விட்டர் ஐடி. இதன் மூலம் திருமாவளவனையும் சீண்டி உள்ளது பாஜக. விதவிதமான பதிவுகளால் பாஜக ஐடி விங்க் களைகட்டி நெட்டிசன்களின் பேசு பொருளாக மாறியுள்ளது என்னவோ உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+