சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட் LIVE: ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கியது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்!

Newest First Oldest First
3:18 PM, 14 Feb

ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்-மு.க.ஸ்டாலின்
11:32 AM, 14 Feb

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு; கட்டுமான பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிப்பு; இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு!
11:27 AM, 14 Feb

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் & மறுசீரமைப்பு. கட்டுமான பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிப்பு. இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு!.
11:26 AM, 14 Feb

பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு
11:06 AM, 14 Feb

8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை. சேலம், கடலூர், விழுப்புரம், மதுரையில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்.
11:03 AM, 14 Feb

சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு
11:03 AM, 14 Feb

ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு
10:59 AM, 14 Feb

சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும்
10:53 AM, 14 Feb

மீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி ஒதுக்கீடு
10:53 AM, 14 Feb

அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு!
10:42 AM, 14 Feb

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு; ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு
10:42 AM, 14 Feb

4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு .
10:38 AM, 14 Feb

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் - ஓ.பி.எஸ் அறிவிப்பு
10:32 AM, 14 Feb

முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகை தொடர ரூ506 கோடி ஒதுக்கீடு
10:28 AM, 14 Feb

அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்கும்- கடலூர் மாவட்டத்துக்கான அரசு கல்லூரியாக செயல்படும்
10:22 AM, 14 Feb

அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு
10:22 AM, 14 Feb

நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூபாய் 18,540 கோடி. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூபாய் 34,181 கோடி. உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி. சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி.
10:18 AM, 14 Feb

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:18 AM, 14 Feb

நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10:16 AM, 14 Feb

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 18,540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:14 AM, 14 Feb

தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10:14 AM, 14 Feb

காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10:14 AM, 14 Feb

சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10:14 AM, 14 Feb

நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும். திருத்திய நெல் சாகுபடி 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
10:13 AM, 14 Feb

உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு. பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம். மின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கல்வித் துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. திருத்திய நெல் சாகுபடி விரிவுபடுத்தப்படும் 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.
10:08 AM, 14 Feb

தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடி; வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடி
10:06 AM, 14 Feb

செயல் திறன் மிக்கவர் என்பதை நிரூபித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இடைப்பட்ட இன்னல்களை எல்லாம் உடைத்து எறிந்தவர் ஜெயலலிதா. மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா.
10:03 AM, 14 Feb

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
10:03 AM, 14 Feb

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை வணங்கி பட்ஜெட் தாக்கல் .
10:00 AM, 14 Feb

இன்னும் சற்று நேரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
READ MORE

Tamilnadu Budget 2020 LIVE UPDATES: Finance Minister O Paneerselvam to launch today
English summary
Tamilnadu Budget 2020: Finance Minister O Paneerselvam to launch today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X