சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BUDGET 2020 | TN Govt will accept 'One nation One ration' scheme

    சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் ஓ . பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் நாடு முழுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்தியாவின் சிறப்பான ரேஷன் முறையை சிக்கலாக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

    உலக வர்த்தக நிறுவனம், இந்தியாவில் வழங்கப்படும் பொது விநியோக திட்டத்தை பல வருடங்களாக கண்டித்து வருகிறது. பொது விநியோக திட்டத்தை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.

     ஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம! ஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம!

    எப்படி இது

    எப்படி இது

    இதற்கு மத்திய அரசும் இசைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். உணவு பாதுகாப்பு மசோதா கூட இதன் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம்தான் இப்போது ரேஷன் வழங்கும் முறையும் மாற்றப்பட உள்ளது. ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையையே மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    தலையீடு

    தலையீடு

    இதற்கு தமிழக அரசும் தலையாட்ட தொடங்கி விட்டது. 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதை நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவதற்கு முன்பே தமிழக மாநில அரசு தேர்வு தேதிகளை அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. அதன்பின், இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

    எப்படி இனி மேல்

    எப்படி இனி மேல்

    தற்போது அதே போல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முன் தமிழக மாநில அரசு உடனடியாக அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். உத்தர பிரதேசத்தில் கோதுமை கிடைக்கவில்லை என்றால், அவர் தமிழகத்தில் வந்து அரிசி வாங்க முடியும்.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த வேளாண் தொடர்பான நிறைய அறிவிப்புகள் வெளியானது. வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்காக 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மோசம்

    மோசம்

    1364 நீர் பாசன பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, தமிழக அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தையும் கொண்டு வருவோம் என்றுள்ளது. தமிழக அரசு பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கும் வகையில் இதை அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவார்கள்.

    English summary
    Tamilnadu Budget 2020: The state will accept the One Nation One Ration scheme says O Paneerselvam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X