வெள்ளை அறிக்கையின் தாக்கம்.. சொத்து வரி, மின் கட்டணங்கள் உயருமா?.. மக்கள் கவலை
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் நிதிநிலையை திமுக அரசு வெளியிட்ட நிலையில் இன்றைய பட்ஜெட்டில் சொத்து வரி, மின் கட்டணங்கள், பஸ் கட்டணங்கள் போன்றவை உயருமா என்ற கவலை மக்கள் மனதில் எழுந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பால், பேருந்து, மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் முக்கிய வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 நிதியுதவி, சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ 100 மானியம், கல்விக் கடன், நகைக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டியது.

5.78 லட்சம் கோடி
இதையடுத்து தமிழக பட்ஜெட்டுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்தார். அதில் தமிழகத்தின் மீது 5.78 லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குடும்பத்தின் மீது 2.63 லட்சம் கடன்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடனிருப்பதாகவும் தனது வெள்ளை அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இதையடுத்து வெள்ளை அறிக்கையை காரணம் காட்சி பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது கடன் சுமையை ஏற்றக் கூடாது என்றும் எதனுடைய விலையும் ஏற்றக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.

போக்குவரத்து துறை
பிடிஆர் தனது வெள்ளை அறிக்கையில் எல்லா துறைகளை விட போக்குவரத்து துறையும் மின்சார துறையும்தான் கடனில் தத்தளிக்கிறது என தெரிவித்திருந்தார். இதனால் இன்றைய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் மின் கட்டணங்களும் பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்படுமா என மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுமா
பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என நேற்றைய தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். எனினும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொது போக்குவரத்தின் கட்டணங்கள் ஏறுமோ என்ற கவலை தொற்றிக் கொண்டுள்ளது. அது போல் மின்சார கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது அதன் கட்டணமும் உயருமா என கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்
தமிழக முதல்வராக தனது தலைமையிலான அமைச்சரவை தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் பொதுமக்கள் மீது எந்த சுமையையும் ஸ்டாலின் ஏற்றமாட்டார் என பலர் கருதுகிறார்கள். மேலும் பிடிஆர் தனது வெள்ளை அறிக்கை வெளியிட்ட போது தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை என்றார். அதாவது போட் கிளப் ஹவுஸில் வீடு உள்ள ஒருவரும் சாதாரண இடத்தில் உள்ள ஒருவரும் ஒரே சொத்து வரியை செலுத்துகிறார்கள். அது போல் அங்கிருக்கும் நபர் செலுத்தும் குழாய் வரியும் சாதாரண குடிசை வீட்டில் இருக்கும் நபர் செலுத்தும் குழாய் வரியும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே இது மாற்றப்பட வேண்டும் என்றார். எனவே கடனை மொத்தமாக ஏழை, நடுத்தர மக்கள் மீது சுமத்தாமல் சொத்து வரி, குழாய் வரி உள்ளிட்டவற்றில் திருத்தம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video

பொருளாதார ஆலோசனை குழு
மேலும் பொருளாதார ஆலோசனை குழுவில் உள்ள ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் உள்ளிட்டோர் வறுமையை ஒழிக்கும் கொள்கைகளை கொண்டவர்கள். எனவே இந்த பட்ஜெட்டில் இவர்களுடைய தலையீடுகள் நிச்சயம் இருந்திருக்கும். இதனால் பொதுமக்கள் மீது சுமையை இவர்கள் ஏற்ற ஆலோசனைகளை வழங்கியிருக்க மாட்டார்கள் என ஒரு சாரார் கூறுகிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications