ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா.. பட்ஜெட்டில் கொடுத்த சர்ப்ரைஸ்.. தங்கம் தென்னரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒசூரில் டைடல் பூங்காவும், விருதுநகரில் மினி டைடல் பூங்காவும் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை, சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கரில் செமி கன்டக்டர் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இது கோவை மண்டல தொழிற் புரட்சிக்கு வித்திடும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

tamil nadu budget 2025 tamil nadu budget 2025 2025

அதில், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் தோல் பொருட்கள்,தானியங்கி வாகனங்கள் மற்றும் வாகன உபபாகங்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தப் பெண் தொழிலாளர்களில் 41 சதவீதத்தினரை தன்னகத்தே கொண்ட சிறப்பையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

தமிழ்நாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தேசிய ஏற்றுமதியில் 33 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப்பெரும் மின்னணுப் பொருட்களுக்கான ஏற்றுமதிச் சூழல்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2020.21 ஆம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி, 2023-24 ஆம் ஆண்டில் 956 பில்லியன் டாலராக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.

அதேபோல் 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்ட நவீன தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வகுத்துத் தந்த தகவல் நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களும் இணைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒசூரில் 5 இலட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளைக் கொண்டு ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். அதன்மூலம் 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+