கிராமத்துக்கு மட்டுமில்ல.. இனி நகர்ப்புற மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கும் இனி செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவை தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.

tamil nadu budget 2025 tamil nadu budget 2025

ஆனாலும் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடர்ந்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் இது தேர்தலுக்கு முன்பான திமுக அரசின் முழு பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கோவை உள்பட சிவங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் அகழாய்வுக்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படும். இப்பணிகளுக்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் பழுதான வீடுகளுக்கு பதில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

இந்திய துணைக் கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் நாவாய் பகுதிகளில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். நொய்யல் பகுதியில் ரூ.22 கோடியில் அருங்காட்சியகம். 2,329 கிராமங்களில் ரூ.1887 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, நகர்ப்புற மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். 500 அரசுப் பள்ளிகளில் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்படும்.

மூன்றாம் பாலினத்தவருக்கும் தவப்புதல்வன் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். பள்ளிகளில் 2,000 கணிணி ஆய்வகங்கள் அமைக்க ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ47,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+