மீண்டும் "திருவள்ளுவர்".. முதல்வரிடமிருந்து ராஜா கண்ணப்பனுக்கு பறந்த உத்தரவு.. வரப்போகும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜா கண்ணப்பனும் முக்கியமான ஆலோசனையை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தை இடம்பெற செய்வது குறித்து ஆலோசித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக கொரோனா கேஸ்கள் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்கிறார்கள்.

 போக்குவரத்து

போக்குவரத்து

27 மாவட்டங்களில் நகர பேருந்துகள் மட்டும் முதல் கட்டமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பேருந்துகள் தற்போது சர்வீஸ் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்துகளை மீண்டும் இயக்கும் வகையில், மொத்தமாக சர்வீஸ் செய்து விரைவில் களமிறக்கும் முடிவில் உள்ளதாக தெரிகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜா கண்ணப்பனுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில் பேருந்துகளை இயக்குவது எப்படி, விதிமுறைகள், எஸ்ஓபி எப்படி இருக்க வேண்டும், கட்டுப்பாடுகள் எப்படி இருக்கலாம் என்பது குறித்து பேசி உள்ளனர்.

 புதிய பேருந்துகள்

புதிய பேருந்துகள்

புதிய பேருந்துகள் வாங்குவது குறித்தும் இதில் பேசப்பட்டு இருக்கிறது. முக்கியமாக தமிழ்நாடு பேருந்துகளில் மீண்டும், திருவள்ளுவரின் புகைப்படத்தை கொண்டு வரும் ஆலோசனையும் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக பேருந்துகளில் திருவள்ளுவர் புகைப்படமும், திருக்குறளும் இடம்பெறவில்லை. இதை மீண்டும் இடம்பெற வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 விரைவில்

விரைவில்

அதேபோல் புதிய பேருந்துகள், நவீன வசதி கொண்ட பேருந்துகள் என்று தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவிலும் உள்ளனர். கொரோனா காலத்திற்கு பின் போக்குவரத்து துறையில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும். அடுத்த வாரம் போக்குவரத்து தொடங்கப்பட்டால் திருவள்ளுவர் புகைப்படத்தோடு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+