நவ.2ல் அல்ல... நவம்பர் 7ல்.. தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7-ஆம் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசின் கொள்கை ரீதியான பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications