சென்னையில் குடியரசு தினவிழா.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் புரோகித்.. மெரினாவில் விழா கோலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் சார்பில் நாட்டின் 71 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.,

இந்தியாவின் 71 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வருகை தரும் ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலர் சண்முகம் ஆகியோர் வரவேற்றனர்.

tamilnadu celebrating indias 71st Republic Day: governor banwarilal purohit hoisted flag

தொடர்ந்து முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காந்தி சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சிறை, தீயணைப்பு மற்றும் வனத் துறையினர், கல்லூரி, பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

அதன்பிறகு குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வீரதீர செயலுக்கான அண்ணா விருது நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது மு.சாஜ் முகமதுவுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் திருப்பூர் காவலர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல் பரிசு கோவைக்கும், இரண்டாம் பரிசு திண்டுக்கல்லுக்கும, மூன்றாம் பரிசு தருமபுரிக்கும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளார்கள். மெரினா கடற்கரை மொத்தமும் விழாகோலம் பூண்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+