"குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தர முன்வர வேண்டும்.." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கட்டுநர் மாநாட்டில் பேசினார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (மார்ச் 12) மாமல்லபுரத்தில், 30வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த அழைப்பிதழின் அடியில் ஒரு வரியை நீங்கள் போட்டிருக்கிறீர்கள், "Role of Construction in Nation Building" என்ற வாசகத்தைப் படித்தேன்.

Tamilnadu chief minister mk stalin says low cost houses need to buld for poor

கட்டுநர்கள், இந்த மாநிலத்தின் - நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவர்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். மத்திய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் மத்திய- மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே இந்த 30-வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது. 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தென்னக மையம், அகில இந்தியக் கட்டுநர்கள் சங்கத்தின் பழமையான மையம் என்பதையும் தாண்டி, "தாய் மையம்" என்பதாலோ என்னவோ, அதே தாய் மனப்பான்மையோடு, மாநிலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வேலை வழங்கும் அமைப்பாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது.

முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல - வேலைவாய்ப்பிற்கும் உறுதுணையாக இருப்பது தான் இந்தச் சங்கத்தின் சிறப்பு என்பதை நான் உணர்கிறேன். சென்னை மையம் மட்டுமே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது என்று சென்னை மையத்தின் தலைவர் சாந்தகுமார் சொன்னார்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்த மையத்தின் சார்பாக செய்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. அதற்காக நான் அரசின் சார்பிலே வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Tamilnadu chief minister mk stalin says low cost houses need to buld for poor

வழக்கமாக, ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள். நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்தக் கட்டுமானத் தொழில் சந்தித்துக் கொண்டு வருகிறது என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர்) கோரக்கூடிய நடைமுறை ரத்து செய்யப்பட்டது. 15 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தப்பட்டது. புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அளவிலேயே மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது. ஒப்பந்ததாரர் பதிவு ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றப்பட்டது. மதிப்பீடுகள் தயாரிப்பதற்கான தரவினை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் - கொரோனா காலத்தின் தாக்கத்திலிருந்து கட்டுமானத்துறை இன்னும் மீளவில்லை என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.

Tamilnadu chief minister mk stalin says low cost houses need to buld for poor

அதை மனதில் வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு கோரிக்கையை என்னிடம் வைத்தீர்கள். ஒப்பந்ததாரர் வகுப்பு 1-ல் பண வரம்பு 10 முதல் 25 கோடி ரூபாயாகவும், செல்வநிலைச் சான்று 1 கோடி ரூபாயாகவும், புதிய வகுப்பு -1A ஏற்படுத்தி அதற்கு பண வரம்பு 25 கோடி ரூபாய்க்கு மேல் நிர்ணயித்து - அதுக்கு solvency 3 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்க அகில இந்திய கட்டுநர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். பிற வகுப்புகளுக்கு தற்போதுள்ள solvency 30 சதவீதத்தில் இருந்து -10 சதவீதமாக குறைக்க கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அகில இந்தியக் கட்டுநர் கழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து- புதியதாக வகுப்பு 1-A ஏற்படுத்தி, solvency 10 சதவீதமாக - அதாவது 2.50 கோடி ரூபாய் எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இதர வகுப்புகளுக்கான Solvency, அனைத்து நிலை ஒப்பந்ததாரர்களும் பயன்பெறக்கூடிய வகையில் 30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

Tamilnadu chief minister mk stalin says low cost houses need to buld for poor

நீங்கள் எனக்கு கோரிக்கை வைத்தீர்கள். இப்போது நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கப் போகிறேன். ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர நீங்கள் முன்வர வேண்டும். தொன்மை வாய்ந்த இந்த மையம்- கட்டுமானப் பணிகளை தரத்துடன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, நீங்கள் இந்த அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டிக் கொடுத்து - வலிமை மிக்க கட்டடங்களாக கட்டிக் கொடுத்து - இந்த அரசுக்கு, "தூண்"போல் நீங்கள் துணை நிற்க வேண்டும்"

Tamilnadu chief minister mk stalin says low cost houses need to buld for poor

ஆகவே, இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடைபெறக்கூடிய ஆட்சி, மக்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி, இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள். கலைஞர் மேற்கோள் காட்டிய செய்திகளை, எங்களை எல்லாம் ஆளாக்கிய அறிஞர் அண்ணா அடிக்கடி எடுத்துச் சொல்லக்கூடிய அந்த உணர்வை மக்களிடம் செல், மக்களோடு சேர்ந்து வாழ், மக்களுக்காக பணியாற்று. ஆகவே, நான் மட்டுமல்ல, பொதுவாக, இந்த ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்று சொல்வதை விட, என் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொல்வதை விட, எங்களுடைய ஆட்சி என்று சொல்வதை விட, நான் எப்போதும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது, இது நமது ஆட்சி, மக்களுக்காக நடைபெறக்கூடிய ஆட்சி. அந்த உணர்வோடு தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்களும் எப்போதும் போல் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் துணை நிற்கக்கூடியவர்கள். எனவே, அதைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும். உங்களுடைய ஊக்கமும் ஆக்கமும் எங்களுக்குக் கிடைத்தால் தான் நாங்கள் பணியாற்ற முடியும், நாங்கள் பணியாற்றினால் தான் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுபோய் சேர்க்க முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+