'சிவப்பு' டிசர்ட்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஒர்க்அவுட்.. இணையத்தை தெறிக்கவிடும் புதிய வீடியோ வைரல்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமா இருந்தது.
இதனால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவும் எளிமையாகவே நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இருந்தாலும்கூட வாரத்தில் சில நாட்களாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்து வருகிறார் ஸ்டாலின். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஜிம்மில் அவர் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.

சைக்கிளிங்
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில்கூட சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கண்ணாடி, ஹெல்மெட் என கலக்கலாக படுவேகமாக ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற அந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

ஓர்க் அவுட் வீடியோ
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் சிவப்பு நிற டீசர்ட் அணிந்துள்ள ஸ்டாலின், ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

திமுக
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் 68 வயதான போதிலும் உடற்பயிற்சி செய்து வருவதாலேயே இன்னும் அவர் இளமையாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், உடலை நலமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications