"ஸ்டுடியோவுக்கு வாங்க.." அன்புடன் அழைத்த ஏ.ஆர்.ரகுமான்.. தட்டாமல் சென்ற முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார்.
Recommended Video
தமிழ்நாட்டிற்குச் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்றுள்ளார்.
துபாயில் இப்போது நடைபெற்று வரும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் இன்று (மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது.

துபாய் எக்ஸ்போ
இந்த எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த அரங்கில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் இந்த ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
அதேபோல துபாயில் உள்ள ஐக்கிய அமீரகத்தின் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக இன்றைய தினம் ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழ்நிலை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விவரித்தார்.

ஏ.ஆர்,ரகுமான்
இதற்கிடையே துபாய் எக்ஸ்போவில் சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரகுமான் துபாயில் தங்கியுள்ளார். இதனிடையே துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இன்று ஏ.ஆர். ரகுமான் சந்தித்தார். மேலும், அங்குள்ள தனது இசை அரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ரகுமான் ஸ்டுடியோவில் முதல்வர் ஸ்டாலின்
ஏ.ஆர். ரகுமானின் இந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கும் "மூப்பில்லா தமிழே... தாயே" என்ற ஆல்பம் பாடலை முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டினார். இதை முதல்வர் ஸ்டாலின் கேட்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் இருக்கும் படங்களும் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications