'அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன்.. விரைவில் மீண்டு வாருங்கள்..' முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்

Recommended Video

    Kamal Hassan -கு கொரோனா தொற்று உறுதி | Bigg Boss 5 Tamil, Isaivani

    நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் திரைப்படங்கள், பிக் பாஸ் எனப் படு பிஸியாக இருந்து வந்தார். இதற்கிடையே வெளிநாடுகளில் கதர் ஆடைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில் KH House of Khadda என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

    இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவைத் தாண்டி பிற வெளிநாடுகளிலும் கதர் ஆடையைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    கமல்

    கமல்

    இந்தச் சூழலில் KH House of Khadda நிறுவனத்தில் காதி ஆடைகளைப் பிரபலப்படுத்துவதற்காக நடிகர் கமல் அமெரிக்கா சென்றிருந்தார். அங்குக் கதர் ஆடைகளைப் பிரபலப்படுத்தும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் கமல் சென்னை திரும்பினார், விரைவில் விக்ரம் பட ஷூட்டிங்கில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து இருமல் இருந்து வந்தது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இதையடுத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து கமல் தனது ட்விட்டரில், "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

    ஸ்டாலின் ட்வீட்

    ஸ்டாலின் ட்வீட்

    நடிகர் கமல்ஹாசன் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டும் எனப் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அன்பு நண்பர் கலைஞானி கமல் ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள கமலுக்குச் சிறப்பு மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கமலுக்கு சுவாச பாதையில் தொற்றும் காய்ச்சலும் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர் உடல் தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+