"கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. ஸ்டாலினின் திட்டமிட்ட மூவ்! நேராக ரஜினியை பார்த்த பூச்சி! என்னாச்சு?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் பாகம் 1 புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்வு பெரிய அரசியல் நிகழ்வு போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளார் . இந்த புத்தகத்திற்கு "உங்களில் ஒருவன்" என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதில் ஸ்டாலினின் அரசியல் பயணம், வாழ்க்கை பயணம், போராட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் 28ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைப்பெற உள்ள "உங்களின் ஒருவன்" புத்தக வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

அழைப்பு
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய அளவில் தலைவர்களை அழைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பிரன்ஸ் தலைவர் எம்பி ஃபரூக் அப்துல்லா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். மிகப்பெரிய கூட்டமாக இந்த நிகழ்வு நடக்க உள்ளது.

மற்ற தலைவர்கள்
அதேபோல் பல்வேறு மாநில முதல்வர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் ஆகியோரும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் சங்கமமாக இந்த நிகழ்வு இருக்க போகிறது.

ரஜினிகாந்த்
இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட பூச்சி எஸ்.முருகன் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி பூச்சி முருகன் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்தார். பெரும் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள உள்ளது பெரும் கவனம் பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் வரவில்லை
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்த பின் நடிகர் ரஜினிகாந்த் பெரிதாக பொது மேடைகளுக்கு வரவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. மக்களை சந்திப்பதை நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் இந்த நிகழ்வு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பெரிய அளவில் பிளான்
முதல்வர் ஸ்டாலினின் இந்த புத்தக வெளியீட்டு விழா எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டமிட்ட மூவாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் கேசி ஆர் ஆகியோர் எதிர்கட்சிகளை பாஜகவிற்கு எதிராக ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்ற வருகின்றனர். அந்த முயற்சியின் ஒருபடியாக ஸ்டாலினின் இந்த புத்தக வெளியீட்டு விழாவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு சென்றுள்ளது.

பாஜகவை ஒதுக்க பிளான்?
ஆனால் அதிமுக - திமுக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் கைது, தேர்தல் தோல்வியால் அதிமுக திமுக மீது கோபத்தில் உள்ளது. இதனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது சந்தேகம்தான். இந்த நிகழ்வில் பாஜக தலைவர்களுக்கு அழைப்பு சென்றதாக தகவல்கள் வெளியாகவில்லை. பெரிய மேடையில் பாஜகவை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பது.. அவரின் திட்டமிட்ட மூவாக இருக்குமோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications