Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி, அன்பழகன் இடத்தில் இருப்பவர் அண்ணன் துரைமுருகன்... சட்டசபையில் ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது இடத்தில்தான் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Recommended Video

    சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் புகழாரம்…கண் கலங்கிய துரைமுருகன்!

    சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பொன்விழா காணுகிறார். இது தொடர்பாக இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் இன்று முதல் தாக்கல் செய்யப்படவுள்ளன. முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கையை அந்த துறை அமைச்சர் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த துறையின் அமைச்சராக இருப்பவர் திமுக பொதுச்செயலாளர், அவை முன்னவர், என்னுடைய மதிப்பிற்குரிய அண்ணன் துரைமுருகன்.

    முதன் முதலாக இந்த அவையில் இந்த துறையின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவது மகிழ்ச்சிக்குரியது பெருமைக்குரியது. நூறாண்டு வரலாறு கொண்ட இந்த சட்டசபைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்வந்தவர்தான் இங்கே அமைச்சராக இருக்கக் கூடிய அண்ணன் துரைமுருகன். 50 ஆண்டுகளாக இந்த சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கக் கூடியவர் அவர்.

    இந்த மன்றத்தை அலங்கரிக்கும் முக்கிய உறுப்பினராக, மூத்த உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன். அதனால்தான் அவையின் முன்னவராக இருந்து வழிகாட்டுகிறார். மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் அண்ணன் துரைமுருகன்.

    கருணாநிதி, பேராசிரியருக்கான இடம்

    கருணாநிதி, பேராசிரியருக்கான இடம்

    பொதுக்கூட்டங்களில் என்னை பற்றி சொல்லும் போது, இளம் வயது பையனாக ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன் என்பார். இதனை அவர் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அண்ணன் துரைமுருகனை கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்றேன். அதுதான் உண்மை. அதைநான் இந்த சபையில் பதிவு செய்யவும் விரும்புகிறேன்.

    வழித்துணையானவர்

    வழித்துணையானவர்

    எதுவாக இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி கட்சிக்கும் ஆட்சிக்கும் துணையாக இருப்பவர். அவருடைய ஊர் பெயர் என்னவென்று கேட்டீர்கள் என்றால் கே.வி. குப்பம். கே.வி. குப்பம் என்பது ஒரு காலத்தில் கீழ்வழி துணையான் குப்பம் என்று அழைக்கப்பட்ட ஊராகும். அப்படி எனக்கு வழித்துணையாக இருப்பவர்தான் நம்முடைய அண்ணன் துரைமுருகன். கருணாநிதிக்கும் அவர் வழித்துணையாக இருந்திருக்கிறார்.

    கருணாநிதி- துரைமுருகன் பாசம்

    கருணாநிதி- துரைமுருகன் பாசம்

    அண்ணன் துரைமுருகனை, துரை, துரை, துரை என்றுதான் கருணாநிதி பாசமாக அழைப்பார். அவரோடு இனிமையாகப் பேசுவார், பழகுவார். இரண்டு பேரும் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையைச் சொன்னால் எங்களுக்கு பொறாமை ஏற்படும். கருணாநிதி, இவரிடம் மட்டும் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாரே என்றெல்லாம் நாங்கள் நினைப்பது உண்டு. என்றைக்காவது துரைமுருகன் வீட்டுக்கு வரவில்லை எனில் உடனே போன் செய்து, துரைமுருகன் எங்கே இருக்கிறார் என பாருங்கள் என்று சொல்லி அவரை வரச் சொல்வார்.

    கருணாநிதியின் இதயசிம்மானசத்தில் இடம்

    கருணாநிதியின் இதயசிம்மானசத்தில் இடம்

    2007-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கருணாநிதி உள்ளம் எப்படி துடித்தது என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தவன். மறுநாள் துரைமுருகனுக்கு சிகிச்சை நடக்கப் போகிறது. முதல்நாள் இரவு துரைமுருகனுக்குப் போன் செய்து, என்ன துரை தூங்கிட்டியா? அப்படி என கேட்டார் கருணாநிதி. இல்லை அண்ணா.. இன்னும் நான் தூங்கவில்லை என்கிறார் துரைமுருகன். காலையில் ஆபரேஷன் அதை நினைத்துப் பயந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டார் கருணாநிதி. இல்லை அண்ணா.இல்லை அண்ணா சமாளித்தார் துரைமுருகன். உன்னைப்பற்றி எனக்கு தெரியும் நானே மருத்துவமனைக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு இரவும் முழுவதும் மருத்துவமனையில் இருந்துவிட்டு காலையில்தான் கருணாநிதி திரும்பினார். அந்த பாசத்தை நான் பெருமையோடு சொல்கிறேன். அண்ணா சொன்னது போல, ஒருதாய் வயிற்றில் பிறக்க வயிறு தாங்காது; அதனால் தனித்தனி வயிற்றில் பிறந்தவர்கள் நாம் என்பதைத்தான் இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த அளவுக்கு கருணாநிதியின் அன்பைப் பெற்றவர் துரைமுருகன். கருணாநிதியின் இதயத்தில் ஆசனம் போட்டு அமர்ந்திருந்தவர் துரைமுருகன்.

    எந்த துறையானாலும் முத்திரை

    எந்த துறையானாலும் முத்திரை

    அந்த இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. 1971-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அதே தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏ.வாக, ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வென்று இந்த அவையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்தவர். அதற்காக நான் அவரை மனம் திறந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். எந்த துறையைக் கொடுத்தாலும் அதில் ஒரு முத்திரை பதிப்பார். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து ஆறுகளின் பெயர்களை மடமடவென அப்படியே சொல்வார். 1925-ம் ஆண்டு காவிரி பிரச்சனை தொடர்பான ஒப்பந்தம் முதல் இன்று வரை எல்லா தகவலையும் தன் மனதில் சேகரித்து வைத்துள்ளார். இந்த கூட்டத்தை அழ வைக்க வேண்டும் என்று நினைத்தால் அழ வைத்துவிடுவார். இந்த கூட்டத்தை சிரிக்க வைக்க நினைத்தாலும் சிரிக்க வைப்பார். உங்களை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டுமானாலும் அதை செய்வார். அமைதியாக இருங்கள் அண்ணா என்றாலும் இருந்துவிடுவார்.

    பாராட்டு தீர்மானம்

    பாராட்டு தீர்மானம்

    தமிழக சட்டசபையில் 50 ஆண்டுகள் பங்கெடுத்து பொன்விழா நாயகராக துரைமுருகன் திகழ்கிறார். எப்போதுமே பொன் போன்று பளபளவென்று சட்டை போட்டுக் கொண்டு வருவார். புன்னகையும் அவரிடத்தில் இருக்கும். அத்தகைய பொன்விழா நாயகருக்கு பாராட்டு தெரிவிக்க இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும். தமிழக சட்டசபையில் 1971 முதல் தற்போது வரை 10 முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவை மாண்பைக் காப்பதில் நல்ல வழிகாட்டி. அமைச்சர் துரைமுருகனை இந்த சபை பாராட்டுகிறது எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+