இதுதான் திமுக! மகிழ்ச்சி என்றால் சாதாரண மகிழ்ச்சியல்ல! உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று முதல்வர் மு. க ஸ்டாலின் சென்னையில் நடந்த திருமண விழாவில் பேசினார்.

திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் - தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் ஆகியோரின் திருமணம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகிழ்ச்சி என்றால் சாதாரண மகிழ்ச்சி அல்ல, அளவுகடந்த மகிழ்ச்சி. நான் இப்போது உணர்ச்சியோடு நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் உரையாற்றியிருக்கும் நம்முடைய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர், அன்பகம் கலையை பற்றிப் பேசுகிற போதெல்லாம் என்னை அறியாமல் நான் உள்ளுக்குள்ளே அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தேன்.

அன்பகம் கலை

அன்பகம் கலை

ஏனென்றால் அன்பகம் கலை அவர்களைப் பாராட்டினால் அது என்னைப் பாராட்டியது போன்றது. அந்த உணர்வோடுதான் நான் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். நேற்றைய நாள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளினுடைய தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும். நேற்று மாலையில் இதே அரங்கத்தில் நம்முடைய அன்பகம் கலை இல்லத்தில் நடைபெறவிருக்கும் திருமணத்தையொட்டி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அன்பகம் கலை, நேற்று காலையிலிருந்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எங்கெல்லாம் பிரச்சினை

எங்கெல்லாம் பிரச்சினை

நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் அவர் தன்னை அறியாமலேயே ஈடுபட்டுக் கொண்டு அந்த பணிகளை ஆற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மாலையில் இல்லத்தில் நடைபெறவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தலில் நம்முடைய தோழர்கள் எங்கெல்லாம் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், எங்கெல்லாம் பிரச்சினை வந்திருக்கிறது என்பதை எல்லாம் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்.

இதுதான் திமுக

இதுதான் திமுக

ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளர்களிடத்தில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் அவர் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் தி.மு.க. இதுதான் தி.மு.க.வின் தொண்டன். அன்பகம் கலையினுடைய சிறப்புகளைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள். முதன்முதலாக அன்பகம் கலை அவர்கள் எனக்கு எவ்வாறு அறிமுகமானார் என்று சொன்னால், ஓராண்டுகாலம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சென்னை சிறைச்சாலையில் அடைபட்டிருந்து, அந்தச் சிறைவாசத்தை அனுபவித்து முடித்து விட்டு நான் விடுதலையாகி வெளியில் வருகிறேன். நான் விடுதலையாகி வெளியில் வருகிறபோதுதான், முதன்முதலில் அன்பகம் கலை-யை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

சிறைச்சாலையிலிருந்து கோபாலபுரத்திற்கு வருகிறவரையில், அவர் தொடர்ந்து என்னை பின்பற்றி வந்து, தலைவர் கருணாநிதி இல்லத்தில் வந்து, தலைவர் கருணாநிதியை பார்க்கின்ற நேரத்தில் உணர்ச்சியோடு முழங்கிய அந்த முழக்கத்தை இன்றைக்கும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரையில், எந்த நேரத்திலும் - எந்தச் சூழ்நிலையிலும் - எப்படிப்பட்ட நிலையிலும், நான் பதவியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும், நான் பொறுப்பில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும், என்னோடு இருந்திருக்கிறார்.

 கூடவே இருந்தார்

கூடவே இருந்தார்

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். சென்னை மாநகரத்தின் மேயராக இருந்திருக்கிறேன். கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். துணை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக இருக்கிறேன். இத்தனை ஆண்டு காலத்தில், அவர் என்னிடத்தில் வந்து, இந்தக் காரியத்தை செய்து கொடுங்கள் என்று ஒருமுறைகூட கேட்டதில்லை. இனிமேலும் கேட்பாரா என்று கேட்டால், நிச்சயமாகக் கேட்க மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், அவருடைய குணம் அவ்வாறானது.

தேர்தலை சந்திக்க தைரியம்

தேர்தலை சந்திக்க தைரியம்

இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரச்சாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கொரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

 ஏனப்பா இப்போது வருகிறாய்

ஏனப்பா இப்போது வருகிறாய்

அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, "மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்" என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+