கைக்கு வந்தது உளவுத்துறை "ரிப்போர்ட்".. லெப்ட்- ரைட் வாங்க போகும் ஸ்டாலின்.. வசமாக மாட்டும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கைக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்று இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அது என்ன ரிப்போர்ட்? அதில் என்ன இருந்தது என்று பார்க்கலாம்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 12838 பதவிகளுக்கு தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இது போக மேயர், நகர மன்ற தலைவர் உள்ளிட்ட மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

 முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகதான் அதிக இடங்களை வெற்றிபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு உளவுத்துறை அறிக்கைகள் ஏற்கனவே முதல்வர் தரப்பிற்கு சென்றதாகவும் 90 சதவிகிதம் திமுகதான் வெற்றிபெறும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அறிக்கை சென்றதாகவும் ஏற்கனவே நாம் செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம். அதன் பொருட்டே முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக களத்திற்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

 நேரடி பிரச்சாரம்

நேரடி பிரச்சாரம்

முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தல் முழுக்க ஆன்லைன் பிரச்சாரம் மட்டுமே செய்தார். வெற்றி உறுதி என்பதால் முதல்வர் நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதை முதல்வரும் சென்னையில் வாக்களித்த போது உறுதி செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம், எங்களுக்கு வந்த தகவலின் படி 21 மாநகராட்சிகளையும் திமுகத்தான் கைப்பற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் படியே முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு நம்பிக்கையாக பேசியதாக கூறப்படுகிறது.

 சில மாவட்டங்கள் தீவிரம்

சில மாவட்டங்கள் தீவிரம்

சில மாநகராட்சிகளில் மட்டும் நெக் டூ நெக் போட்டி இருக்கலாம் என்று உளவுத்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின் போட்டி அதிக உள்ள மாநகராட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலருக்கு உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. மற்ற மாநகராட்சிகளில் பிரச்சனையில்லை, உங்கள் மாநகராட்சிகளில் இருந்துதான் ரிப்போர்ட் சரியில்லை. கடைசி நேரத்தில் பணிகளை தீவிரப்படுத்துங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

 ஆனால் வேலை பார்க்கவில்லை

ஆனால் வேலை பார்க்கவில்லை

முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் சட்டசபை தேர்தலில் திமுக சரியாக செயல்படவில்லை. இதனால் அங்கு இருக்கும் அனைத்து மாநகராட்சி பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் உத்தரவை கேட்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடைசி ஒரு வாரம் மிக தீவிரமாக வேலை பார்த்து இருக்கின்றனர். தொடக்கத்தில் இருந்த சுணக்கம் நீங்கி கடைசி கட்டத்தில் நன்றாகவே தேர்தல் பணிகளை செய்து இருக்கின்றனர். ஆனால்.. நிலைமை இப்படி இருக்க கடைசி நேரத்தில் சில மாவட்டங்களில் மட்டும் சில நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

 கடைசி நேரத்தில் சொதப்பல்

கடைசி நேரத்தில் சொதப்பல்

சில இடங்களில் அமைச்சர்கள் சிலர் தேர்தல் களத்திற்கு சரியாக செல்லவில்லை. மாவட்ட செயலாளர்களை வேலை பார்க்க வைத்துவிட்டு அமைச்சர்கள் களத்திற்கு செல்வதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதேபோல் திமுக எம்எல்ஏக்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் அண்டை மாவட்ட அமைச்சர்களை தேர்தல் பணிகளை செய்யும்படி தலைமை உத்தரவிட்டு இருந்தது.ஆனால் சில அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் 100% ரிசல்ட் வந்தால்தான் தங்கள் ஆட்களுக்கு பதவி கிடைக்கும் என்பதால் பக்கத்து மாவட்டங்கள் பக்கமே தலைகாட்டவில்லை என்றும் தலைமைக்கு புகார் சென்றுள்ளதாம்.

 சென்னை அளவிற்கு இல்லை

சென்னை அளவிற்கு இல்லை

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தேர்தலுக்கு பிந்தைய ரிப்போர்ட் என்கிறார்கள். அதன்படி வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் ரிஸ்க்கான சில மாநகராட்சி, நகராட்சி பட்டியல்களை அனுப்பி உள்ளனராம். சென்னையில் திமுக கண்டிப்பாக வெல்லும். சென்னையில் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டது போல சில இடங்களில் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று இந்த ரிப்போர்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம்.

 ஒற்றுமை

ஒற்றுமை

முக்கியமாக சில இடங்களில் திமுக எம்எல்ஏக்கள் - அமைச்சர்கள் இடையே மோதல்கள் இருந்ததாகவும். சில இடங்களில் கட்சிக்கு உள்ளேயே உள்ளடி வேலைகள் செய்யப்பட்டதாகவும் கூட புகார் அளிக்கப்பட்டு இருக்கிறதாம். அதிலும் சில அமைச்சர்கள் உட்பட 4 பேர் மீது இந்த ரிப்போர்ட்டில் புகார் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன. அந்த 4 பேர் யார் என்பது பற்றிய விவரங்கள் தேர்தல் ரிசல்ட்டிற்கு பின் சில நாட்களில் தெரியும் என்கிறார்கள். அதோடு முக்கியமான அமைச்சர் ஒருவரின் மாவட்டத்தில், திமுக வெல்லக்கூடாது என்று பக்கத்துக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சில உள்ளடி வேலைகள் பார்க்கவும் புகார் சென்று இருக்கிறதாம்.

 முக்கியமான அமைச்சர்

முக்கியமான அமைச்சர்

இதனால் தேர்தலுக்கு பின் கலையெடுப்புகள் கண்டிப்பாக நடக்கும். அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றங்கள், சில எம்எல்ஏக்களுக்கு கட்சி பதவி பறிப்பு அல்லது வார்னிங் போன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின்தான் முதல்வர் ஸ்டாலின் லெப்ட் ரைட் வாங்க போகிறார்.. அவர் மாவட்ட செயலாளர்களின் செயலை பார்த்து திருப்தியாக இருக்கிறார். ஆனால் அந்த 4 பேர் மீது மட்டும் ஏக கடுப்பில் இருக்கிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று ரிசல்ட் வர உள்ள நிலையில் இந்த ரிப்போர்ட் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+