"கப்சா.." மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவே பாஜகவின் சதிதான்.. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. சோனியா காந்தி இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே எனப் பல தேசிய தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே மொழி என்று ஒற்றை ஆட்சியைக் கொண்டு வர பாஜக திட்டமிடுகிறது.. இந்திய மக்களின் நலனுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.. பாஜகவைத் தோற்கடிப்பதே இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை, நாடாளுமன்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. மகளிர் இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்ற நோக்கிலேயே பாஜக இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.. வரும் லோக்சபா தேர்தலில் இதைக் கொண்டு வந்திருந்தால் மோடியைப் பாராட்டி இருக்கலாம்.
பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கப்சா மசோதா.. இதன் காரணமாகவே இதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.. இப்படி மகளிர் இட ஒதுக்கீட்டைத் தடுக்க நினைக்கும் பாஜக 2024க்கு பிறகு ஆட்சியில் இருக்கப் போவதில்லை.. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜகவின் சதியாகவே பார்க்க வேண்டும்.
சாதிவாரியான கணக்கெடுப்பு கேட்டால், மக்களைப் பிரிக்கப் பார்ப்பதாக மோடி கூறுகிறார்... அனைத்து தரப்பினருக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கேட்கிறோம்.. ராகுல் காந்தி இப்போது சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications