ஜானகி அம்மாள் 100ஆவது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின்? ஓபிஎஸ், எடப்பாடிக்கு பெரிய செக்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் 100-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் நடந்து வருவது அனைவருக்குமே தெரியும். ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பாக அணிகள் பிரிந்து கிடக்கின்றனர்.
ஏற்கனவே, ஒரு தரப்பினர் மற்றொரு அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டனர். மேலும், இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினரை மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக
அதேபோல தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று இரண்டு தரப்பினரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. வழக்கு காரணமாகக் கட்சி நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை என்றும் இதனால் விரைந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் தேவை என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஜானகி அம்மாள்
இப்படி மாறி மாறி இரு தரப்பும் மோதி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியிலும் கூட சலிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இது ஒரு பக்கம் இருக்க மறைந்த முன்னாள் முதல்வரும் எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விழா ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

100ஆவது பிறந்த நாள்
ஜானகி அம்மாளின் நவ. 100-வது பிறந்தநாள் நாளை (நவ. 30) வருகிறது. அவரது பிறந்தநாளை அவரது தம்பி குடும்பத்தின் வாரிசுகள் விமர்சிக்கக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். ஜானகி அம்மாளின் தம்பி மகள் லதா. இவரது கணவர் ராஜேந்திரன். இவரைத்தான் தனது மருமகனாக ஏற்றுக்கொண்டு இருந்தார் எம்.ஜி.ஆர்! சென்னை அடையாறில் உள்ள ஜானகி-எம்ஜிஆர் அரசு கல்லூரி, லதா ராஜேந்திரனிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இவரது மகன் குமார் ராஜேந்திரன்தான் இப்போது இந்த மருத்துவக் கல்லூரியைப் பராமரித்து வருகிறார். நாளை (30/11/22) ஜானகி அம்மாளின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இதைக் கல்லூரி வளாகத்தில் விமர்சிக்கக் கொண்டாட இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கலந்துகொண்டு, ஜானகி அம்மாள் பற்றிய விழா மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உரை நிகழ்த்துவார் எனத் தெரிகிறது.

மறந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்
விழாவிற்குக் கலந்து கொள்வதற்கு லதாராஜேந்திரன் குடும்பத்தின் சார்பில் முதல்வரை அழைத்துள்ளதாகவும் நேரம் இருப்பின் வருகிறேன் என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. ஜானகி அம்மாளை பற்றி ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மறந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால்... அது அரசியல் ரீதியாகப் பரபரப்பாகும் என்றும் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டால் அது நிச்சயம் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பும்!












Click it and Unblock the Notifications