கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

'அன்னை தமிழில் அர்ச்சனை'
'அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 06) அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது.

முதல்வர் வெளியிட்டார்
இந்நிலையில் இதற்கான அறிவிப்புப் பலகையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது அமைச்சர் சேகர் பாபு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ குமரகுருபரன் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த பலகையில் குருக்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும்.

அமைச்சர் சேகர் பாபு
இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டரில், " தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, "அன்னைத் தமிழில் அர்ச்சனை" திட்டத்தின் அறிவிப்புப் பலகையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

ட்விட்டர்
இதன் மூலம் திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும்" என அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுவதை ட்விட்டர் தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications