சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எச்எல்எல் பயோடெக்".. திடீரென விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. தயார் நிலையில் செம திட்டம்.. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு வேக்சின் கிடைக்காத நிலையில், புதிய திட்டங்களில் தமிழக அரசு களமிறங்கி உள்ளது.

Recommended Video

    HLL Biotech-க்கு திடீர் Visit அடித்த MK Stalin பின்னணி | Oneindia Tamil

    இந்தியா முழுக்க தற்போது மிகப்பெரிய அளவில் வேக்சின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியா மற்ற நாடுகளை போல அல்லாமல், பெரிய அளவில் வேக்சின்களை முன்கூட்டியே ஆர்டர் செய்யவில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிட்ஷீல்ட் போன்ற வேக்சின்களை கூட மத்திய அரசு இதுவரை பெரிதாக ஆர்டர் செய்யவில்லை.

    இதனால் வேக்சின் கொடுப்பதில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. மத்திய அரசு சொதப்பியதால், மாநில அரசுகளே வேக்சினுக்காக சர்வதேச டெண்டர் விடும் பணியில் இறங்கி உள்ளன.

    மத்திய அரசின் புது ஐடி விதி.. தனியுரிமைக்கு எதிரானது என வாட்ஸ்ஆப் புகார்.. டெல்லி ஹைகோர்டில் வழக்கு மத்திய அரசின் புது ஐடி விதி.. தனியுரிமைக்கு எதிரானது என வாட்ஸ்ஆப் புகார்.. டெல்லி ஹைகோர்டில் வழக்கு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச அளவில் வேக்சின் டெண்டர்களை விட்டு உள்ளன. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு வேக்சின் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. மாறாக மத்திய அரசுடன் மட்டுமே வேக்சின் விற்பனையை மேற்கொள்வோம் என்று கூறிவிட்டது. அமெரிக்காவில் உள்ள ஜான்சனன் ஜான்சன் நிறுவனமும் இதே முடிவை எடுக்கும் வாய்ப்புள்ளது.

     மீதம்

    மீதம்

    அதிலும் மாடர்னாவிடம் இந்த வருட இறுதி வரை விற்பனை செய்ய டோஸ் இல்லை என்று கூறிவிட்டது. இதனால் தமிழக அரசு ஸ்புட்னிக் வி, சீனாவின் சினோவேக்ஸ் போன்ற மற்ற வேக்சின்களை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களும் இதே வேக்சின்களை வேண்டும் என்று செல்ல வாய்ப்புள்ளதால், பெரிய தட்டுப்பாடு, போட்டி இதற்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    அழைப்பு

    அழைப்பு

    இதனால்தான் தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு வேக்சின் கிடைக்காத நிலையில், புதிய திட்டங்களில் தமிழக அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக முன்பே பெரு நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்து இருந்தது. தமிழகத்தில் வேக்சின் உற்பத்தியை மேற்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்து இருந்தது.

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். 2012ல் திறக்கப்பட்ட இந்த மையம் கிட்டத்தட்ட 9 வருடமாக இயங்கவே இல்லை. மத்திய அரசு இதை கொஞ்சம் கவனித்து இருந்தால், தமிழகத்திலேயே பல மில்லியன் டோஸ் வேக்சின்களை உற்பத்தி செய்திருக்க முடியும்.

    உலகத்தரமானது

    உலகத்தரமானது

    மத்திய அரசின் இந்த மையம் உலகத்தரமானது. இதைத்தான் எப்படியாவது இயங்க வைக்கும் முடிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை இயங்க வையுங்கள் , தேவையான உதவியை நாங்கள் செய்கிறோம் என்று தமிழக அரசே நேரடியாக கூறிவிட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக அமைச்சர்கள் பேசி உள்ளனர்.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    இதன் பொருட்டே நேற்று நேரடியாக முதல்வர் ஸ்டாலின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் விசிட் அடித்தார். இதற்கு பின் இரண்டு காரணங்கள் உள்ளது என்கிறார்கள். அதன்படி முதல் விஷயம் எச்.எல்.எல். பயோடெக் மையத்தில் வேக்சின் தயாரிக்க வைத்து, அதில் அதிக அளவு டோஸ்களை தமிழகத்திற்கு கேட்டு பெறுவது. இரண்டாவது இதேபோன்று தமிழக அரசு சார்பாக வேக்சின் உற்பத்தி மையத்தை உருவாக்குவது.

    வேக்சின் மையம்

    வேக்சின் மையம்

    இந்த மையம் எப்படி இருக்கிறது, இதை அமைக்க எவ்வளவு செலவாகும், வேறு எங்கு இதேபோல் வேகமாக வேக்சின் உற்பத்தி மையத்தை உருவாக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வேக்சின் வருவது தாமதமானால், தமிழகத்திலேயே வேக்சினை உருவாக்கும் தற்சார்பு சுயாட்சி திட்டம் அரசிடம் உள்ளது. அந்த திட்டத்தின் முக்கியமான படிதான் முதல்வர் ஸ்டாலினின் இந்த விசிட் என்று நெருக்கமான வாட்டரங்கள் தெரிவிகின்றன.

    English summary
    Tamilnadu CM M K Stalin's visit to HLL biotech vaccine manufacture centers gives hope on state-level production.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X