தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. எங்கெல்லாம், என்ன சலுகை? மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், நேற்று, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.
அதில், எந்தெந்த பகுதிகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கலாம், எப்படி தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு நடைமுறையை இன்னும் சில காலம் கடைபிடிக்கலாம் என்று மருத்துவர் குழு பரிந்துரைத்த நிலையில், நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது, அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து கேட்டறிவார். 5-வது கட்ட ஊரடங்கு காலத்தின் போது எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என்பது இதில் முடிவெடுக்கப்படும்.
ஏனெனில் 5-வது கட்ட ஊரடங்கு காலத்தில் மாநில அரசு பெரும்பாலான முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கலெக்டர் கொடுக்கக்கூடிய தகவல்கள், அதிலிருந்து மாநில அரசு எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications