தமிழக மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? இன்று வெளியாகும் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து இன்று வெளியாகிறது.
புதுவை எம்பி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் களமிறக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.
கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரும் 27ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவை தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆலோசனை நடந்தது. டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு தொகுதிக்கு 3 பெயர்களை கொண்ட பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications